சாதி தான் இப்ப ட்ரெண்ட்… காரி துப்பினால் நல்ல படமா.? கொந்தளித்த இமான் அண்ணாச்சி..

0
Follow on Google News

தற்பொழுது தமிழ் சினிமாவில் சாதி குறித்த சர்ச்சை மிக பெரிய பேசும் பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக மாமன்னன் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் கமல்ஹாசன் முன்னிலையில் தேவர் மகன் படம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மாமன்னன் படத்தின் இயக்குனர் மாரிசெல்வராஜ் பேசிய பேச்சு சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் மிக பெரிய விவாத பொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில் மாரிசெல்வராஜ் பேசிய இந்த பேச்சுக்கு பின்னால், சினிமா துறையை சேர்ந்த பலரும், தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள், இதில் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குனர் பேரரசு போன்ற சினிமா முக்கிய பிரபலகங்கள் சினிமாவில் சாதி சார்ந்து படம் எடுக்கும் இயக்குனர்களுக்கு எதிராக இதற்கு முன்பு பேசியிருந்தார்கள்,

இதில் கே ராஜன் இந்த ஒரு இயக்குனர் பெயரை குறிப்பிடாமல் சாதி சார்ந்த சர்ச்சைக்கு பதிலளித்து இருந்தார், ஆனால் இயக்குனர் பேரரசு நேரடியாகவே மாரிசெல்வராஜ் பெயரை குறிப்பிட்டு அவர் பேசிய தேவர் மகன் படம் குறித்த சர்ச்சை பேச்சுக்கு பதிலளித்திருந்தார், இந்நிலையில் தற்பொழுது சாதி குறித்த சர்ச்சைக்கு அமைதி காத்து வந்த சினிமா துறையினர் ஒவ்வொருவராக எதிர்ப்பு குரல் கொடுக்க தொடங்கியுள்ளார்கள்.

அந்த வரிசையில் காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி, சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், தற்போது சினிமா வேறு ஒரு இடத்திற்கு சென்று விட்டது, சினிமாவை இரண்டு ரகமாக பிரித்துக் கொள்ள வேண்டும். ஒன்று படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது அவர்கள் காரி துப்பிக் கொண்டே வந்தால் அந்த படம் மிகப்பெரிய வெற்றியை அடையும் இது ஒரு ரகம்.

இன்னொரு புதிய ட்ரெண்ட் ஒரு குறிப்பிட்ட சமுதாயம் பற்றி படம் எடுத்தால் அந்த படம் பரபரப்பாக ஓடும், படம் பார்த்து விட்டு வரும்போது கேட்கிறார்கள் இது என்ன சமுதாய சார்ந்த படம், அதேபோன்று ஒரு இயக்குனரிடம் நீங்கள் படம் எடுக்கவில்லையா என்று கேட்டால்.? ஆமாம் நான் ஒரு சமுதாயம் சார்ந்த ஒரு படம் எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்கிறார். அது கீழ்தட்டா மேல் தட்டா இப்படி எல்லாம் கேட்க ஆரம்பித்து விட்டார்கள், தட்டு தட்டாக கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

இங்கே மேடையில் வெற்றி படம் கொடுத்த பிரம்மாண்ட இயக்குனர்கள் இருக்கிறார்கள், இவர்கள் படத்தில் ஏதாவது சாதிய வாடை இருந்திருக்குமா.? ஆனால் அந்த படங்கள் எல்லாம் 100 நாட்கள் 175 நாட்கள் ஓடி மிகப் பெரிய வெற்றி அடைத்தது, அப்படி படங்களை கொடுத்த இயக்குனர்கள் இங்கே அமைதியாக உட்கார்ந்து இருக்கிறார்கள். ஆகையால் இதிலிருந்து சினிமா வெளியில் வரவேண்டும் என இமான் அண்ணாச்சி எந்த ஒரு இயக்குனர் பெயரையும் குறிப்பிட்டு பேசவில்லை என்றாலும், பலரும் இயக்குனர் மாரி செல்வராஜை தான் இமான் அண்ணாச்சி சீண்டும் வகையில் பேசுகிறார் என கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.