தொலைக்காட்சியில் கலக்கும் வாய்ப்பு… பெண் டிரைவர் ஷர்மிளாவுக்கு அடித்த ஜாக்பாட்..

0
Follow on Google News

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பானது, முதல் சீசன் மிக பெரிய ஹிட் கொடுத்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் தான் என்பது யாரும் மறுக்க முடியாதா உண்மை.

தினமும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மட்டும் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தோன்றுவதால், அந்த இரண்டு நாட்கள் கூடுதல் பார்வையாளர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பார்கள். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தவிர வேர யாரும் இந்த நிகழ்ச்சியை இவ்வளவு சிறப்பாக கொண்டு செல்ல முடியாது என்கிற அளவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருக்கிறது, இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, இதற்கு முன்பு கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய போது, அவருடைய சினிமா மார்க்கெட் மிக பெரிய சரிவில் இருந்தது, ஆனால் தற்பொழுது விக்ரம் பட வெற்றி, அடுத்து இந்தியன், மேலும் தெலுங்கில் வில்லனாக நடிக்க 100 கோடிக்கு மேல் சம்பளம் என கமல்ஹாசன் பிசியாக இருப்பதால், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்க மிக பெரிய தொகை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 7ன் ப்ரோமோ ஷூட்டில் கமல்ஹாசன் கலந்துகொண்டுள்ளார், ஒரு பக்கம் பிக் பாஸ் சீசன் 7 ப்ரோமோ வேலைகள் நடந்துகொண்டிருக்க, மறுப்பக்கம் பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்க்கும் போட்டியாளர்களுக்கு ஆட்களை பிடிக்கும் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது விஜய் டிவி, விஜய் தொலைக்காட்சியில் இருந்து 3 நபர்கள் வரை இம்முறை பிக் பாஸ் வீட்டிற்கு போகலாம் என்றும்,

மேலும் வெள்ளி துறையில் சிலர், மற்றும் சமூக வலைதளத்தில் பிரபலமாக அறியப்படும் பொதுமக்களில் இருந்து ஆட்களை பிடிக்கும் வேளைகளில் விஜய் டிவி இறங்கியுள்ளது, அந்த வகையில் தற்பொழுது மிக பிரபலமாக சமூக வலைத்தளத்தில் அறியப்பட்டவர் கோவையை சேர்ந்த பெண் ட்ரைவர் ஷர்மிளா, சமீபத்தில் கமல்ஹாசன் இவரை நேரில் அழைத்து கார் பரிசு கொடுத்து பாராட்டினார்.

இந்நிலையில் தற்பொழுது விஜய் டிவியின் பார்வை ஷர்மிளா மீது பட்டுள்ளது, அந்த வகையில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக ஷர்மிளா பங்கேற்க வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது, மேலும் ஷர்மிளா சமீபத்திய பேட்டிகளை கவனித்து வரும் விஜய் டிவி, அடுத்து தன்னுடைய தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக உருவாக்கி விடலாம் என்கிற திட்டமும் விஜய் டிவி நிர்வாகத்திற்கு உள்ளது என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று புகழ் பெற்ற ஜூலி, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாக அறியப்பட்டு, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினி வாய்ப்பு அவருக்கு கிடைத்தது, அதே பார்முலாவில், தற்போது பெண் டிரைவர் ஷர்மிளா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க்க இருப்பதாக கூறப்படும் நிலையில், அந்த நிகழ்ச்சி முடிந்தது, தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஷர்மிளாவுக்கு வாய்ப்பு கொடுத்து , காலப்போக்கில் அவருக்காக ஒரு நிகழ்ச்சியை உருவாக்கி அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பை கொடுக்கும் திட்டத்தில் விஜய் டிவி நிர்வாகம் இருப்பதாக கூறப்படுகிறது.