விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பவரகள் கண்களில் கண்ணீர் வந்து விட்டால் அதை வைத்து ப்ரோமா செய்து அந்த நிகழ்ச்சியை பிரபலம் அடை செய்வதில் விஜய் தொலைக்காட்சி நிர்வாகத்திடம் போட்டி போட யாரும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர்களுக்கு நிகர் அவர்களே, அந்த வகையில் தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ஒரு நிகழ்ச்சிக்கான ப்ரோமோ மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
ஸ்டார் கிட்ஸ் என்கிற விஜய் டிவி நிகழ்ச்சியின் ப்ரோமோ தான் அது, அதில் விஜய் டிவி பிரபலங்கள் தங்கள் குழந்தைகளை அருகில் வைத்துக்கொண்டு கண்ணீர் மல்க பேசியுள்ளது, பார்ப்பவர்களை எரிச்சலூட்டும் வகையில் அமைந்துள்ளது, சூப்பர் சிங்கர் மூலம் பிரபலம் அடைந்த கிராமிய பாடகி ராஜலக்ஷ்மி செந்தில், அந்த ப்ரோமோவில் பேசும்போது, நான் வீட்டில் புடவை கட்டிவிட்டால் எனது குழந்தைகளுக்கு ஒரு பதட்டம் வந்துவிடும்.
எங்கம்மா போகிற…எப்பம்மா வருவா.. என்று குழந்தைகள் கேட்க்கும், அப்போது தான் கண்ணீரை துடைத்து விட்டு சிரித்து கொண்டே வெளியில் வருவோம். அப்புறம் பிள்ளைகளை வீட்டில் விட்டுவிட்டு நீங்க இரண்டு பேர் மட்டும் ஜாலியாக பிகினிக் வந்த மாதிரி வந்துருக்கீர்கள் என்று சொல்லும் போது எங்களுக்கு ரெம்ப வலிக்கும் என்று ராஜலக்ஷ்மி கண்ணீர் மல்க அருகில் தன்னுடைய குழந்தைகள் இருவரையும் வைத்து கொண்டு பேசுகிறார்.
இந்த ப்ரோமோவை பார்த்த பொதுமக்கள் தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளார்கள் அதில், கொரோனா தொற்றின் போது வீட்டில் இருக்கவே முடியல, வருமானமே இல்லை என்று பல டிவி பிரபலம் தெரிவித்தார்கள், இப்போது என்ன என்றால் எங்கள் குழந்தையை பிரிந்து எங்களால் இருக்க முடியவில்லை என, இரண்டு அல்லது மூன்று நாட்கள் பிரிந்து இருப்பதற்கு ஓவர் சீன் போடுகிறார்கள், அப்படி உங்களால் பிரிந்து இருக்க முடியவில்லை என்றால் வீட்டில் இருங்கள் என்றும்.
மேலும், ஏம்மா..பல வருடம் தன்னுடைய குடும்ப வறுமையால் எந்த ஒரு சந்தோஷத்தையும் அனுபவிக்காமல் எத்தனையோ பேர் குடும்பத்தை பிரிந்து வெளிநாடுகளில் வேலை செய்கிறார்கள். இராணுவத்தில் பணிபுரியும் இரணவ வீரர்கள் தனக்கு பிறந்த குழந்தைகள் முகத்தை கூட பார்க்காமல் வீர மரணம் அடைகிறார்கள்.என்னமோ நீங்க தான் குடும்பத்தை பிரிந்து இருப்பது போன்று ஓவரா சீன் போடுறீங்க. விஜய் டிவி கொடுத்த காசுக்கு மேலே கூவுரியே ராஜலக்ஷ்மி என்றும்.
மேலும் வெளிநாட்டில் வாழும் தமிழர் ஒருவர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், இங்க அவனவன் குடும்பத்தை பிரிந்து, பல வருஷமா வெளிநாட்டில வெந்துதும் வேகாததும் சாப்பிட்டு கொண்டு இருக்கோம், அதை எல்லாம் உங்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்ய மாட்டீங்க, ஏன் என்றால் நாங்க பிரபலம் கிடையாது. என பொது மக்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடதக்கது.