விஜய்யின் 67வது படமாக உருவான லியோ, கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். விஜய் – லோகேஷ் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படமாக லியோ அமைந்தது. இந்நிலையில், லியோ படத்துக்கு தாறுமாறான எதிர்பார்ப்பு காணப்பட்டது. லியோ தான் கோலிவுட்டில் முதல் ஆயிரம் கோடி வசூலிக்கும் படமாக இருக்கும் என்றெல்லாம் எதிர்பார்ப்பு எழுந்தது.
விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், கெளதம் வாசுதேவ், மிஷ்கின், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 19ம் தேதி வெளியான லியோவுக்கு, முதல் நாளில் சிறப்பான ஓபனிங் இருந்தது. ஆனால், அதன்பின்னர் படத்துக்கு நெகட்டிவான விமர்சனங்கள் கிடைத்ததால், அடுத்தடுத்த நாட்களில் லியோ வசூல் குறைய தொடங்கியது.
முதல் நாளில் மட்டுமே 148 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்தது. ஒட்டுமொத்தமாக இதுவரை 500 கோடிக்கும் அதிகமாக கலெக்ஷன் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே லியோவுக்கு நெகட்டிவான விமர்சனங்கள் கிடைத்ததால், ஏராளமான ரசிகர்கள் இந்தப் படம் பார்க்க தியேட்டர் செல்லவில்லை. ஓடிடியில் பார்த்துக்கொள்ளலாம் என விட்டுவிட்டனர்.
முதல் பாதியை சஸ்பென்ஸ் ஆக டாப்புக்கு கொண்டு வந்த நிலையில் இரண்டாம் பாதி அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. தேவை இல்லாமல் அர்ஜுன், சஞ்சய் தத் கேரக்டர்களை கொண்டு வந்து படத்தை குழப்பி விட்டிருக்கிறார் லோகேஷ். அதுவும் அர்ஜூனுக்கு இந்த மாதிரியான ஒரு மொக்கை சீன் ரொம்பவே அதிருப்தியைக் கொடுக்கிறது என விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில் தற்போது ஒரு செய்தி வெளிவந்துள்ளது. அதன்படி இப்படத்தை பார்த்த விஜய் இரண்டாம் பாதி சரியாக இல்லை என்றும் எடிட்டிங்கில் மாற்றவும் என்று படம் ரிலீசுக்கு முன்பே தெரிவித்து இருந்துள்ளார். அதாவது லியோ இரண்டாம் பாதி படு மொக்கையாக இருக்கு என விஜய்க்கே புரிந்துள்ளது.அதே போன்று லியோ படத்தின் எடிட்டரும் கூட இவ்வாறு கூறியுள்ளார். ஆனால் லோகேஷ் கனகராஜ் இது எதையுமே காது கொடுத்து கேட்கவில்லை. நான் இப்படிதான் எடுப்பேன் என்று கூறியுள்ளார்.
கடைசியில் படம் ரிலீசான பிறகு ரசிகர்களின் கருத்துகளால் லோகேஷ் கனகராஜ் மாற்றி இருக்கலாம் என்று யோசித்தாராம். விஜய்யே படத்தின் இரண்டாம் பாதி சரியில்லை என்று சொன்ன பின்பும் லோகேஷ் கனகராஜ் சிறிதும் கேட்காமல் படத்தை எடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இப்படிப்பட்ட படத்திற்கு வெற்றி விழா வேறு வைத்த கொண்டாடினர். நல்ல படத்திற்கு வெற்றி விழா வைக்கலாம், ஆனால் இந்தப் படத்திற்கு எதற்கு வெற்றி விழா வைக்க வேண்டும் என்று அந்த சமயத்திலேயே ரசிகர்கள் பலர் இணையத்தில் வறுத்தெடுத்தார்கள்.
ஆனால் அது எதையுமே படக்குழுவினர் காது கொடுத்து கேட்காமல் வெற்றி விழாவையும் கொண்டாடினர். இந்நிலையில் லியோ தற்போது ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது. இதனிடையே தீபாவளிக்காக லியோ ஸ்க்ரீன்கள் குறைக்கப்பட்டன. ஆனால், கார்த்தியின் ஜப்பான் பெரியளவில் சக்சஸ் ஆகவில்லை, அதேநேரம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இதனால் ஜப்பானுக்கு ஒதுக்கப்பட்ட ஸ்க்ரீன்கள் தற்போது லியோவுக்கு கிடைத்துள்ளன. இருந்தாலும் பார்க்க ஆட்கள் இல்லாமல் லியோ ஷோ ரத்து செய்யப்பட்டு வருவது குறிப்பிடதக்கது. மேலும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு லியோ படத்தால் எந்த லாபமும் இல்லை, நஷ்டம் தான் ஏற்பட்டது என்று திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவரே சமீபத்தில் பரபரப்பான பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது.