வெளியாவதற்கு முன்பே பாகுபாலி,RRR படத்தை ஓரம் கட்டிய இந்தியன் 2…

0
Follow on Google News

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வரும் படம் இந்தியன் 2. ஏற்கனவே நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் பல வருடங்களுக்கு முன்பு வெளியான இந்தியன் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து இயக்குனர் சங்கருக்கு பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் வாங்கிக் கொடுத்த படம் இந்தியன்.

அந்த வகையில் இந்தியன் 2 படத்தை காண எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. மேலும் ஏற்கனவே சங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான எந்திரன் 2 படம் மிகப்பெரிய தோல்வியை அடைந்த நிலையில், தன்னுடைய அடுத்த படைப்பு மிக பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்பதில் மிக தீவிரமாக வேலை செய்து வருகிறார் சங்கர்.

இதற்கு முன்பு வெளியான இந்தியன் படத்தில் இந்தியன் தாத்தா பல கொலைகளை செய்துவிட்டு போலீசாரால் தேடப்படும் குற்றவாளியாக இந்தியாவில் இருந்து தப்பித்து வெளிநாட்டுக்கு சென்று விடுகிறார். அத்துடன் வெளிநாட்டிலிருந்து தொலைபேசி மூலம் இந்தியாவில் உள்ள போலீசாரை தொடர்புகொண்டு இந்தியனுக்கு சாவே கிடையாது என்றும் இதை நாட்டு மக்களுக்கு தெரிவியுங்கள் என கமல்ஹாசன் பேசும் அந்த காட்சியுடன் படத்தின் முடிவு இருந்திருக்கும்.

இந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் வெளிநாட்டில் உள்ள இந்தியன் தாத்தா தேடப்படும் குற்றவாளியாக இருப்பதால் விமான மூலம் இந்தியாவில் உள்ள நுழைய முடியாது, அதனால் கடல் மார்க்கமாக இந்தியாவில் உள்ளே நுழைகிறார். ராமேஸ்வரம் தனுஷ்கோடி வழியாக இந்தியன் தாத்தா இந்தியா உள்ளே நுழைகிறார். சமீபத்தில் பனையூரில் ஒரு சண்டைக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது அதில் இந்தியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் நடக்கும் சண்டை காட்சி போன்று படமாக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தநிலையில் இந்தியன் 2 படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் பிரபல OTT நிறுவனமான நெட் பிலிக்ஸ் அவர்களாகவே முன் வந்து பெரும் தொகைக்கும் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தொகைக்குக்கு இதுவரை தென் இந்தியாவில் எந்த படமும் விற்பனை செய்ய படவில்லை என்பதால், இந்தியன் 2 படம் வெளியாவதற்கு முன்பே பாகுபலி, RRR போன்ற படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் சாதனையை முறியடித்துள்ளது இந்தியன் 2 என்பது குறிப்பிடத்தக்கது.