உதயநிதிக்கு சாதகமாக மாறிய விஜய்க்கு எதிரான ஆட்டம்.. 

0
Follow on Google News

கடந்த 2021 தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைந்த பின்பு தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பாலான திரைப்படங்களின் தமிழ்நாடு திரையரங்கு உரிமைகளை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்று தமிழ்நாடு முழுவதும் திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது. தமிழ் திரைப்படம் மட்டுமின்றி பிறமொழி படங்கள் RRR மற்றும் கே ஜி எஃப் போன்ற மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படங்களையும் வெளியிட்டது ரெட் ஜெயன்ட் மூவிஸ்.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையை பெற்று தமிழ்நாட்டில் முறையான வசூலை வாரி குவித்து, சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு சரியான கணக்கை காண்பித்து தங்களுடைய நேர்மையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் காட்டி வருவதால், பெரிய பட்ஜெட்டில் வெளியாகும் திரைப்படங்களை நம்பிக்கையுடன் உதயநிதி ஸ்டாலினிடம் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை முன்வந்து கொடுத்து வருகின்றனர் தயாரிப்பாளர்கள்.

மேலும் பெரிய படங்களில் தியேட்டர் உரிமைகளை போட்டி போட்டுக் கொண்டு ரெட் ஜெயன்ட் மூவிஸ் வாங்கி வருகிறது. விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் வாரிசு மற்றும் அஜித் நடிப்பில் வெளியாக இருக்கும் துணிவு ஆகிய இரண்டு படங்களையும் தங்கள் நிறுவனம் வாங்கி தமிழ்நாடு திரையரங்கில் வெளியிட வேண்டும் என்பதில் ஆரம்பத்திலிருந்து முனைப்பு காட்டி வந்தனர் ரெட் ஜெயன்ட் மூவிஸ்.

ஆனால் உதயநிதி மீது ஏற்கனவே இருந்த மன வருத்தத்தின் காரணமாக வாரிசு படத்தை எந்த ஒரு காரணத்திற்காகவும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் கொடுக்கக் கூடாது என்று நடிகர் விஜய் பிடிவாதமாக இருந்துள்ளார். இருந்தும் உதயநிதி ஸ்டாலின் பல முயற்சிகள் செய்தும் வாரிசு படத்தின் தமிழ்நாடு உரிமை கிடைக்கவில்லை.

இதனை தொடர்ந்து துணிவு படத்தை தமிழ்நாடு திரையரங்கு உரிமைகள் பெற்ற ரெட் ஜெயன்ட் மூவிஸ் படத்தை தனக்கு கொடுக்காத நடிகர் விஜய்க்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்கிற முடிவில், வாரிசு படம் வெளியாகும் அதே தேதியில் துணிவு படத்தையும் வெளியிட முடிவு செய்து, தமிழ்நாட்டில் பெரும்பாலான திரையரங்குகளில் துணிவு படத்தை வெளியிடுவதற்கான விற்பனையும் மிக ஜோராக நடந்து முடிந்துள்ளது.

இதனால் வாரிசு படம் வெளியாவதற்காகு திரையரங்குகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது, உதயநிதியின் நடவடிக்கைகளால் வாரிசு படத்திருக்கும் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் நடிகர் விஜய்யும் திடீரென்று தன்னுடைய ரசிகர்களை அழைத்து பிரியாணி விருந்து கொடுத்து அரசியல் உணர்வுகளை ரசிகர்களுக்கு தூண்டி விட்டுள்ளார். இது உதயநிதிக்கு மறைமுக எச்சரிக்கை என்றும் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் ஒருபுறம் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றீர்கள், மறுபக்கம் அஜித் ரசிகர்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக களம் இறங்கி விஜய் ரசிகருடன் சண்டையிட்டு வருகின்றனர். மேலும் துணிவு படத்தை உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டில் வெளியிட இருப்பதால் அஜித் ரசிகர்களின் ஆதரவும் உதயநிதி ஸ்டாலினுக்கு பெருமளவு இருந்து வருகிறது.

இந்த நிலையில் விஜய- உதயநிதி இருவருக்கும் இடையில் நடந்த இந்த மோதல் உதயநிதிக்கு சாதகமாக அஜித் ரசிகர்களின் ஆதரவு பெருகி வருவது, அது உதயநிதியின் அரசியலுக்கு சாதகமாக மாறி உள்ளது. இதனை தொடர்ந்து அஜித் ரசிகர்களின் ஆதரவை உதயநிதி இனிவரும் காலங்களில் தக்க வைத்துக் கொள்வார் என்றும் கூறப்படுகிறது.