நடிகர் ரஜினிகாந்த் தனது புதிய படம் வெளிவருவதற்கு முன்பு, ரசிகர்களை சந்திப்பது, அல்லது அரசியல் வருகை குறித்து பரபரப்பு என கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இதே பார்முலாவை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்தே திரைப்படம் படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருக்கும் நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் 38 மாவட்ட செயலாளர்களுக்கும் நடிகர் ரஜினிகாந்த் சார்பில் வரும் திங்கள் கிழமை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டப்த்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நான் அரசியலுக்கு வருவது உறுதி, எனது அரசியல் ஆன்மீக அரசியல், 2021 சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என் தனது ரசிகர்கர்களை உசுப்பேத்திவிட்டு, அவர்களும் தலைவர் அரசியலுக்கு வருகிறார் என்ற நம்பிக்கையில் தங்கள் சொந்த பணத்தில் போஸ்டர் ஓட்டுவது என மிகுந்த எதிர்பார்ப்புடன் பணியாற்றி வந்தனர், ஆனால் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் தான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்தார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் அரசியல் வருகையை கைவிட்ட பின்பு, பொறுமை இழந்த அவரது ரசிகர்கள் மாற்று கட்சியில் தங்களை இனைந்து கொண்டனர். இந்நிலையில் ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பு தொடங்கி அவர் அரசியல் விலகல் வரை தமிழக்தில் பரபரப்பாக ரஜினியின் ஒவ்வொரு அசைவுகளும் பேசப்பட்டு வந்த இந்த இடைப்பட்ட காலத்தில் தொடர்ந்து இடைவேளை இல்லாமல் திரைப்படங்களில் நடித்து கோடிகளை குவித்தார் என்றே சொல்லலாம்.
இந்நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்கிற அறிவிப்புக்கு பின் அவரை பெரிதும் யாரும் கண்டுகொள்ளவில்லை. மேலும் அவரால் ஏமாற்றம் அடைந்த அவரது ரசிகர்கள் சோர்ந்து போய் விட்டனர்.இந்நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் அண்ணாத்தே திரைப்படம் படப்பிடிப்பு விரைவில் முடியும் தருவாயில் இருக்கும் நிலையில் தற்போது ரஜினி மக்கள் மன்றத்தின் 38 மாவட்ட செயலாளர்களுக்கும் நடிகர் ரஜினிகாந்த் சார்பில் அழைப்பு விட பட்டுள்ளது.
ரஜினிகாந்த் இந்த அழைப்பு அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் அண்ணாத்தே படத்தின் விளம்பரம் படுத்தும் யுக்தி என்று விமர்சனம் எழுந்துள்ளது. அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சைக்கு சென்று சென்னை திரும்பியுள்ள ரஜினிகாந்த் அண்ணாத்தே படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு முன்பு தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்துவிட்டு சென்றால் ஒருவிதமான பரபரப்பை ஏற்படுத்தலாம் என்பதர்க்காக தான் இந்த சந்திப்பு என கூறபடுகிறது.