உன்னுடைய வளர்ப்பு சரியில்லை…. ரஜினிகாந்த்-லதா இடையே உச்சகட்ட மோதல்.! வீட்டை விட்டு வெளியேறிய ரஜினிகாந்த்..

0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா – தனுஷ் தம்பதியர் பிரிவு நடிகர் ரஜினிகாந்த் அவருடைய மனைவி இடையே உச்சக்கட்ட மோதல் உருவாகியுள்ளது. ரஜினிகாந்த் இளைய மகள் சௌந்தர்யா முதல் திருமணம் விவகாரத்தில் முடிந்து அவருக்கு இரண்டாவது திருமணமும் செய்து வைத்தார் ரஜினிகாந்த். அப்போது குடுப்பதினர் சௌந்தர்யா மீது எந்த தவறும் இல்லை என்பது போல் ரஜினிகாந்தை சமாதனம் செய்து அவரின் கோபத்துக்கு ஆளாகாமல் பார்த்து கொண்டனர்.

இந்நிலையில் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா அவரது கணவர் இடையே கடந்த சில வருடங்களாகவே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தது. ஐஸ்வர்யா அடிக்கடி வெளிநாடு சென்று ஷாப்பிங் செய்வது. மாதத்தில் சுமார் 20 நாட்கள் போயஸ் கார்டனில் இருக்கும் தந்தை வீட்டில் இருப்பது. என தனது இஷ்டத்துக்கு வாழ்ந்து வந்தவர்,கணவர் தனுஷ் எங்கே சென்றார், சாப்பிட்டாரா.? படப்பிடிப்புக்கு சென்றவர் எப்போது வீட்டுக்கு திரும்புவார் என சிறிதும் அக்கறை இல்லாமல் இருந்து வந்துள்ளார் ஐஸ்வர்யா.

சுப்பர் ஸ்டார் மகள். வசதியாக வாழ்ந்தவர்,என செல்வாக்குடன் வாழ்ந்தவர் தனது மனைவி என்பதால் தனது மனைவியை கேள்வி கேட்க தயங்கிய தனுஷ் அவருடைய இஷ்டத்துக்கே விட்டுவிட்டார். ஒரு கட்டத்தில் மனைவி ஒரு பாதையில் செல்வது போன்று தானும் ஒரு பாதையை தேர்வு செய்து, பொருத்தது போதும் இனி வாழ்க்கையை சந்தோசமாக கழிப்போம் என முடிவு செய்த தனுஷ் சக நடிகைகளிடம் கூத்தும் கும்மாளமாக கழிக்க தொடங்கினார்.

ஒரு கட்டத்தில் தனுஷ் விவகாரம் மனைவிக்கு தெரிய வர குடும்பத்தில் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதனால் இவர்களுக்கு இடையில் தொடர்ந்து ஏற்பட்ட கருத்து வேறுபாடு உச்சக்கட்டம் அடைந்ததை தொடர்ந்து இந்த விவகாரம் பொது வெளிக்கு வந்தால் இருவரின் தண்டவாளம் வண்டவாளம் ஏறும் என்பதால் நாகரிகமான முறையில் இருவரும் பிரிவதாக தெரிவித்துள்ளார். ஆனால் இருவரும் பிரிவது தொடர்பாக தயார் லதா மூலமாக ஏற்கனவே ரஜினிகாந்த் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார் ஐஸ்வர்யா.

அப்போது ஏதும் தெரிவிக்காமல் அமைதியாக கேட்டு கொண்ட ரஜினிகாந்த் தற்போது தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவதாக அறிவித்த பின்பு தனது குடும்பத்தினர் மீது கோபத்தின் உச்சிக்கே சென்றுள்ளார். மனைவி லதாவை பார்த்து உன்னுடைய வளர்ப்பு சரியில்லை, ஒரு பெண்ணை எப்படி வளர்க்க வேண்டும் என்று நீ வளர்க்கவில்லை, அது தான் இரண்டு மகள்களின் விவகாரத்துக்கு காரணம், ஐஸ்வர்யாவின் இரண்டு மகன்களும் பெரிய பசங்களாக வளர்ந்து விட்டார்கள்.

தற்போது கனவன் மனைவி இருவரும் இணைந்து அந்த பசங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வதை விடுத்து தங்களின் விருப்பத்துக்காக இருவரும் பிரிந்தால் அந்த பசங்க வாழ்க்கையை பற்றி இருவரும் சிந்தித்து செயல்படுகிறார்கள். இதே போன்று நான் நினைத்திருந்தல் என்றோ உன்னை விவாகரத்து செய்திருப்பேன் என ரஜினிகாந்த் கோபத்துடன் தெரிவித்து என் மூஞ்சிலே முழிக்காதீர்கள் என கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறுகிறேன் என தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து இரண்டாவது மகள் சௌந்தர்யா, அப்பாவிடம் பேசி சமாதானம் செய்து எங்கேயும் போக வேண்டாம் என கேட்டு கொண்டதை தொடர்ந்து போயஸ் கார்டன் வீட்டில் தனது இரண்டாவது மகள் சௌந்தர்யா மற்றும் பேரன் குழந்தைகளிடம் மட்டும் பேசிக்கொண்டு மனைவி மற்றும் மூத்த மகள் ஐஸ்வர்யா ஆகியோர் மீது கோபத்தில் இருந்து வரும் ரஜினிகாந்த் பெரும்பாலான நேரங்களில் தியானத்தில் இருப்பதாக கூறபடுகிறது.