தமிழன் பணத்தில் தமிழன் வயிற்றில் அடித்த மணிரத்தினம்… கண்ணீர் விட்டு கதறும் பாதிக்கப்பட்ட தமிழர்கள்..

0
Follow on Google News

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இதற்கு முன்பு எம்ஜிஆர் கமல்ஹாசன் போன்ற பல ஜாம்பவான்கள் திரைப்படமாக எடுக்க முயற்சித்து முடியாமல் கைவிட்டனர். அந்த வகையில் பலரும் முயற்சித்து முடியாமல் போன கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தற்பொழுது இரண்டு பாகங்களாக திரைப்படமாக எடுத்துள்ளார் இயக்குனர் மணிரத்தினம்.

அதில் ஒரு பாகம் தற்பொழுது வெளியாகி உள்ள நிலையில், இரண்டாவது பாகம் அடுத்த வருடம் தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகும் என்று தகவல் வெளியாகிறது. முதல் பாகத்திலேயே இரண்டு பாகத்திற்கும் சேர்த்து முதலீடு செய்த பணத்தையும் எடுத்து, அதற்கு மேலும் பல கோடி லாபத்தை இந்த படம் பெற்றுத் தந்துள்ளது, அந்த வகையில் இனி இரண்டாவது பாகம் வெளிவந்தால் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இருவருக்குமே அது போனஸ் தொகையாக தான் இருக்கும்.

இந்த நிலையில் பொன்னியின் படம் வெளியான நேரமும் காலமும் இயக்குனர் மணிரத்தினத்திற்கு கை கொடுத்துள்ளது என்றே சொல்லலாம், தொடர்ந்து ஒரு வாரம் பள்ளி விடுமுறை, மற்றும் பண்டிகை விடுமுறை காரணமாக அலுவலக விடுமுறை. இதனால் திரையரங்குகளுக்கு குடும்பத்துடன் படையெடுக்கும் ஃபேமிலி ஆடியன்ஸ், இதுவே தொடர்ந்து அனைத்து பொன்னியின் செல்வன் வெளியான திரையரங்குகளும் ஹவுஸ்புல் காட்சியில் நிரம்பி வழிந்ததற்கு காரணம்.

அதே நேரத்தில் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த பல தமிழ் அறிஞர்கள் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பல்வேறு சர்ச்சை கூறிய காட்சிகள் குறித்து, படத்தில் இடம்பெற்று இருந்த கதையின் வரலாற்று பிழைகளையும் தங்களது அதிருப்தி மூலம் வெளிப்படுத்தி வந்தது, இந்த படத்திற்கு மேலும் விளம்பரத்தை தேடி தந்து, அந்த படத்தில் அப்படி என்னதான் இருக்கின்றது என்கிற ஆர்வத்தை தூண்டி, மக்களை திரையரங்கு பக்கம் தள்ளியது.

பொன்னியின் செல்வன் ஒவ்வொரு தமிழனும் பெருமை அடையச் செய்யும் வகையில் இது தமிழனின் வரலாற்றுப் படம் என்று விளம்பரம் செய்து தமிழனின் பணத்தில் பெரும் கோடி லாபத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கும் இயக்குனர் மணிரத்தினம், இந்த படத்தின் மூலம் தமிழர்களை வயிற்றில் அடித்த சம்பவம் ஒன்றும் அரங்கேறி உள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தில் டெக்னீசியன்கள் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள், இயக்குனர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர், அந்த படத்தில் நடித்த முன்னணி நடிகர்கள் தமிழ் சினிமா துறையைச் சார்ந்தவர்கள், அப்படி இருக்கையில் அவர்களுக்கு வசதியாக இந்த படத்தின் படப்பிடிப்பை தமிழ்நாட்டில் எடுக்காமல், பெரும்பாலும் ஹைதராபாத்தில் பிரமாண்ட செட் அமைத்து இந்த படத்தை எடுத்துள்ளார் மணிரத்தினம்.

இதனால் தெலுங்கு சினிமா துறையைச் சார்ந்த தொழிலாளர்களுக்கும் பெரும் வேலை வாய்ப்பை பெற்று தந்துள்ளார் மணிரத்தினம். கொரோனா காலத்தில் பெரும் வறுமையில் சிக்கித் தவித்த தமிழ் சினிமா தொழிலாளர்களுக்கு பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் நடைபெற்று இருந்தால், அவர்களுக்கு பெரும் வர பிரசாதமாக இருந்திருக்கும்.

ஆனால் தமிழர்களின் வரலாற்றுப் படம் தம்பட்டம் அடித்துக்கொண்டு, தன்னுடைய படத்தில் தமிழ் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தராமல், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து, அவர்கள் அவர்கள் வாழ்வு செழிக்க ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பிரம்மாண்ட செட் அமைத்து சுமார் 90 சதவிகித படப்பிடிப்பை அங்கே நடத்தியுள்ளார் மணிரத்தினம்.

தமிழர்களின் உணர்வுகளை தூண்டி, தன்னுடைய படத்தை ஓட வைத்து வசூல் வேட்டை நடத்திவரும் மணிரத்தினம், அவருடைய படத்தில் பெரும்பாலும் பிற மாநிலத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து தமிழர்களின் வயிற்றில் அடித்துள்ளார் என பாதிக்கப்பட்ட தமிழ் சினிமா தொழிலாளர்கள் கண்ணீர் மல்க கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் தமிழனின் வயிற்றில் அடித்தது மட்டுமல்லாமல், மணிரத்தினத்தின் மனைவி சுஹாசினி அதை பெருமைப்படுத்தும் விதத்தில் ஆந்திராவில் நடந்த பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தான் நடந்தது, அதனால் இது உங்களுக்கான படம் என்று தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.