இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில், லைக்கா தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வசூலில் இமாலயா சாதனை படைத்து வரும் படம் பொன்னியின் செல்வன். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படித்த தமிழர்களுக்கு இந்த படம் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எம்ஜிஆர், கமல்ஹாசன் போன்ற பலர் எடுக்க முயற்சித்து தோல்வியை தழுவினார்கள். குறிப்பாக தமிழ் சினிமாவின் மூத்த கலைஞர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் பொன்னியின் செல்வன் கதையில் நடிக்க பல முறை முயற்சித்தும் முடியமால் போனது. இருந்தும் இந்த படத்தில் தங்கள் இடம் பெறவில்லை என்றாலும் கூட, அந்த படத்தின் படைப்புகளை வெளிப்படையாக பாராட்டி இயக்குனர் மணிரத்தினத்திற்கு மிகப்பெரிய கௌரவத்தை அளித்து வருகின்றனர்.
பொன்னியின் செல்வன் படத்திற்கு முன்பு, இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான செக்கச் சிவந்த வானம் படத்திற்கு பின்பு, இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஆர்வமாக இருந்துள்ளார் ரஜினிகாந்த். அந்த கால கட்டத்தில் லைக்கா நிறுவனம் ரஜினிகாந்திடம் தங்கள் தயாரிப்பில் நடிக்க கால்ஷீட் கேட்டு அணுகி உள்ளார்கள். அதற்கு கால் சீட் கொடுக்க தயாராக இருக்கிறேன் ஆனால் அந்த படத்தை மணிரத்தினம் இயக்க வேண்டும் என ரஜினிகாந்த் லைக்கா நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து மணிரத்தினத்தை அவருடைய வீட்டில் நேரில் சந்தித்து ரஜினிகாந்த் கால் சீட் கிடைத்துள்ளது, அந்த படத்தை நீங்கள் இயக்க வேண்டும் என ரஜினிகாந்த் விருப்புவதாக லைக்கா நிறுவனம் மணிரத்தினத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர், இந்த பேச்சுவார்த்தைக்கு சில நாட்களுக்கு முன்பு மணிரத்தினம் மனைவி சுஹாஷினியை தொடர்பு கொண்ட ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் தன்னுடைய கணவர் மணி சார் இயக்கத்தில் நடிக்கஆர்வமாக இருப்பதாக தன்னுடைய கணவரின் விருப்பத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் படத்தை நீங்க தான் இயக்க வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்த வந்த லைக்கா நிறுவனத்திடம், ரஜினிகாந்தை உதாசீனப்படுத்திவிட்டு, கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இரண்டு பாகங்களாக பாகுபலிக்கு இணையாக ஒரு படம் பண்ணலாம் என்று இருக்கிறேன்,அந்த படத்தை உங்கள் தயாரிப்பில் எடுக்கலாம் என லைக்கா நிறுவனத்திடம் கேட்டுள்ளார் மணிரத்தினம்.
அதற்க்கு இந்த படத்தை ரஜினிகாந்தை வைத்து எடுக்கலாம் என லைக்கா தெரிவிக்க, அதற்கு அவ்வளவு நாள் ரஜினிகாந்த் கால் சீட் கொடுக்க முடியாது, மேலும் இந்த படம் இளம் நடிகர்களை வைத்து எடுத்தால் தான் நன்றாக இருக்கும், அருள் மொழிவர்மன், வந்தியத்தேவன், ஆதித்ய கரிகாலன் என மூவருக்கும் சம அளவில் இந்த படத்தில் காட்சிகள் இருக்கும், இதில் ரஜினிகாந்த் எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும், மற்ற கதாபாத்திரத்தை விட அவருக்கும் முக்கிய துவம் கொடுக்கும் வகையில் கதையை மாற்றி அமைக்க நேரிடும் என தெரிவித்த மணிரத்தினம்.
பொன்னியின் செல்வன் படத்தில் ரஜினிகாந்த் செட்டாக மாட்டார் என மறுத்துவிட்டார். இருந்தும் பொன்னியின் செல்வன் படத்திற்கு முன்பு ரஜினியை வைத்து ஒரு படம் எடுத்துவிட்டு, அடுத்த பொன்னியின் செல்வன் ப்ரோஜெட்டை தொடங்கலாம் என லைக்கா கோரிக்கையை கூட நிராகரித்து விட்டார் மணிரத்தினம் என கூறப்படுகிறது. இதனால் ரஜினி கால்சீட் கிடைத்தும் அவரை வைத்து படம் எடுக்க முடியாத சூழல் லைக்கா நிறுவனத்துக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் மணிரத்தினம் இயக்கத்தில் தானாக முன் வந்து நடிக்க வாய்ப்பு கேட்டும் கூட , தன்னை உதாசீனப்படுத்தியதை மனதில் வைத்து கொள்ளாமல், பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு மணிரத்தினத்தை பெருமையாக ரஜினிகாந்த் பேசியது அவருடைய பெரிய மனதை காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.