ரஜினிகாந்த் சினிமா கேரியரில் முக்கியத்துவம் வாய்ந்த படம் சந்திரமுகி. 1995க்கு பின்பு பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா, என பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து வந்த ரஜினிகாந்த் நடிப்பில் அவரது சொந்த தயாரிப்பில் வெளியான பாபா படம் மிக பெரிய தோல்வியை சந்தித்து, இத்துடன் ரஜினியின் சினிமா வாழ்க்கை முடிந்தது என்றெல்லாம் ஒரு தரப்பினர் கேலி கிண்டலாக விமர்சனம் செய்து வந்தனர்.
இந்த சுழலில் ரஜினிகாந்த் நடிப்பில், அடுத்து வெளியாகி மிக பெரிய ஹிட் கொடுத்த படம் சந்திரமுகி, இந்த படத்தின் வெற்றி விழாவில் நான் யானை அல்ல குதிரை, விழுந்த உடனே எந்திரித்து விடுவேன் என்று வீர வசனம் பேசியவர் ரஜினிகாந்த், அந்த அளவுக்கு சந்திரமுகி மிகப்பெரிய ஹிட் கொடுத்து மீண்டும் சினிமாவில் நான் தான் நம்பர் 1 என ரஜினிகாந்த் நிரூபிக்க முக்கிய காரணமாக இருந்தது.
இதனை தொடர்ந்து சந்திரமுகி 2க்கான கதையை தயார் செய்து, அந்த படத்தின் கதையை ரஜினிகாந்திடம் தெரிவித்து அவருடைய கால் சீட்காக காத்திருந்தார் இயக்குனர் பி வாசு. இந்த கதை ரஜினிக்கு மிகவும் பிடித்திருந்தால், நம்பிக்கையுடன் காத்திருந்தார் பி.வாசு. சந்திரமுகி படம் கன்னடாவில் வெளியான அந்தரமித்ரா படத்தின் கதையை உள்ள ஸ்கிரிப்டில் சில மாற்றங்கள் கொண்டு வந்து தமிழில் பி.வாசு இயக்கியிருந்தார்.
அந்தரமித்ரா 1 படத்தில் நடித்த நடிகை சௌந்தர்யா இந்த படம் வெளியான அடுத்த சில மாதங்களிலேயே இறந்து விட்டார். நடிகை சௌந்தர்யா படையப்பா,அருணாச்சலம் போன்ற படங்களில் ரஜினியுடன் சேர்ந்து நடித்தவர். இருந்தும் இது ரஜினியை பெரிதாக பாதிக்கவில்லை. அதேபோன்று அந்தரமித்ரா 2 படத்தில் நடித்த விஷ்ணுவர்தன், அந்தரமித்ரா 2 வெளியான அடுத்த சில மாதங்களிலேயே அவரும் இறந்து விட்டார்.
ரஜினியின் மிக நெருங்கிய நண்பர் விஷ்ணுவர்தன் என்பதால் அவரை மிகவும் பாதிப்படையச் செய்தது. மேலும் அந்ரமித்ரா 1 படத்தில் நடித்த சௌந்தர்யா மரணம், அந்த மித்ரா 2வில் நடித்த விஷ்ணுவர்தன் மரணம், இதை மனதில் வைத்து செண்டிமெண்டாக அந்தரமித்ரா படத்தின் கதையை தழுவிய சந்திரமுகி 2 படத்தில் தால் தனக்கு ஏதும் பிரச்சனை வந்து விடுமோ என்ற அச்சத்தில் தான் ரஜினிகாந்த் சந்திரமுகி 2 படத்தில் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து நடிகர் ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார், இதில் சந்திரமுகியாக நடிகை லட்சுமிமேனன் நடிக்க இருக்கிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. படம் சந்திரமுகி 1யை விட மிக பிரமாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது.