ஆயிரம் கோடி பட்ஜெட்டில் சங்கர் இயக்கும் வேள்பாரி… இந்த பிரமாண்ட படத்தின் ஹீரோ யார் தெரியுமா.?

1
Follow on Google News

தற்பொழுது இந்திய சினிமாவில்,வரலாற்று கதைகளை மையப்படுத்தி படம் எடுக்கும் முயற்சிகளில் பல இயக்குனர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய சினிமாவை பாகுபலிக்கு முன் பாகுபலிக்கு பின் என்றுதான் பிரித்துப் பார்க்க வேண்டும். ஒரு வரலாற்று கதையை பிரம்மாண்டமாக எடுத்தால் அது வெற்றி பெறும.? என்கின்ற தயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தை கூட இதற்கு முன்பு நடிகர் கமல்ஹாசன் மற்றும் எம்.ஜி.ஆர் போன்றவர்கள் எடுக்க முயற்சி செய்தும் அவர்களால் முடியாமல் போனது.

அந்த வகையில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்து வரலாற்று கதைகளை இதே போன்று பிரம்மாண்டமாக எடுத்தால் மக்கள் நிச்சயம் அந்த படத்திற்கு அங்கீகாரம் கொடுப்பார்கள் என்கின்ற தைரியம் பாகுபலி படம் வந்த பின்பு பல இயக்குனர்களுக்கு ஒரு நம்பிக்கை கொடுத்தது. அந்த வகையில் பலர் முயன்றும் முடியாமல் போன பொன்னியின் செல்வன் படத்தை கையில் எடுத்தார் மணிரத்தினம்.

பொன்னியின் செல்வன் நாவலை மையப்படுத்தி, சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக பொன்னியின் செல்வன் படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் மணி ரத்தினம். இந்த நிலையில் தற்பொழுது தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார் இயக்குனர் சங்கர். அதே போன்று பாதியிலே நின்ற இந்தியன் 2 படத்தை மீண்டும் இயக்கத் தொடங்கியுள்ளார்.

சங்கர் இயக்கத்தில் இந்த இரண்டு படங்களின் வேலைகளை முடித்துவிட்டு, அடுத்து சுமார் ஆயிரம் கோடி பட்ஜெட்டில் ஒரு வரலாற்றுக் கதையை படமாக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார் சங்கர். பிரபல எழுத்தாளர் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்பி சு வெங்கடேசன் எழுத்தில் வெளியான வேள்பாரி நாவலை தழுவிய கதையை பிரம்மாண்டமாக படமாக்க திட்டமிட்டு இந்த கதைக்காக ஒரு பெருந்தொகையை சு வெங்கடேசனிடம் கொடுத்து வாங்கியுள்ளார் இயக்குனர் சங்கர்.

இந்தப் படத்தை மூன்று தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரிக்கிறார்கள், அதில் பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃபிக்ஸ், பிரபல இந்தி தயாரிப்பாளர் கரண் ஜோகர், மற்றும் பிரபல இந்தி தயாரிப்பு நிறுவனம் பெண் மீடியா ஆகியோருடன் சங்கர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதில் ஓடிடி தளத்தை நெட்பிக்ஸ் நிறுவனமும், தியேட்டர் ரிலீஸை கரண் ஜோகரும் பிரித்து கொள்வோம் என்று அவர்களுக்குள் பேசி ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் பல மொழிகளில் தங்களுடைய ஓடிடி சேவையை தொடர்கிறது நெட் பிலிக்ஸ், அந்த வகையில் சுமார் ஆயிரம் கோடி பட்ஜெட்டில் உருவாகும் வேள்பாரி படத்தை பல மொழிகளில் எடுத்து உலகம் முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலை படித்த லிங்குசாமி, அதில் உள்ள சிறப்பு அம்சங்களை சமீபத்தில் சங்கரிடம் தெரிவித்து வியந்துள்ளார்.

மேலும் இதை நீங்கள் படமாக எடுக்கலாம் என்று சங்கரை வலியுறுத்தியுள்ளார் லிங்குசாமி. இதன் பின்பு வேள்பாரி கதையை படித்த சங்கர். இதை படமாக எடுக்க முடிவு செய்துள்ளார். ஆகையால் வேள்பாரி படத்தை சங்கர் எடுப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் லிங்குசாமி என கூறப்படுகிறது.இந்த நிலையில் இந்த படத்தில் யார் ஹீரோ என்பதும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியா முழுவதும் வசூலை வாரி அள்ளி குவித்த கேஜிஎப் படத்தின் கதாநாயகன் யாஷ் தான், சங்கர் இயக்கும் சுமார் ஆயிரம் கோடி பட்ஜெட்டில் உருவாகும் பிரம்மாண்டமான வேள்பாரி படத்தில் நடிக்க இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து மேலும் தமிழரின் வரலாறை உலகம் முழுவதும் எடுத்து செல்ல தயாராகிவிட்டார் இயக்குனர் சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 COMMENT

Comments are closed.