தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இசையமைப்பாளராக தற்பொழுது இருந்து வருகின்றவர் அனிரூத். மிகக் குறுகிய காலத்தில் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைக்கும் வாய்ப்பை பெற்று மிகப்பெரிய உச்சத்தில் இருக்கின்றவர் இசையமைப்பாளர் அனிருத்.
தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக பெரும் ஜாம்பவான்களாக இருந்த இளையராஜா, அதன் பின்பு ஏ ஆர் ரகுமான் என அடுத்த தலைமுறைக்கான இடத்தை தற்போது அனிருத் தக்க வைத்துள்ளார். இசையமைப்பாளர்கள் பெரும்பாலும் சினிமாவில் சம்பாதிப்பதை விட கச்சேரி நிகழ்ச்சிகளில் அதிகம் சம்பாதித்து வருகின்றனர்.
சமீபத்தில் லண்டனில் அனிருத்தின் இசை கச்சேரி நடந்துள்ளது. இந்த கச்சேரி நிகழ்ச்சிக்கு டிக்கெட் எடுப்பதற்காக கச்சேரி நடக்கும் ஸ்டேடியத்திற்கு வெளியில் சுமார் அரை கிலோ மீட்டர் அளவு பெரும் கூட்டம் இருந்துள்ளது. இசைக்கச்சேரியில் கலந்து கொள்ளும் அனைவரும் தன்னை அருகில் இருந்து பார்க்க வேண்டும் என்பதற்காக கச்சேரி நடக்கும் ஸ்டேடியத்தில் இரண்டு மேடைகள் அமைத்து ஏற்பாடு செய்துள்ளார் அனிருத்.
முன் வரிசையில் அமர்ந்திருக்கும் விஐபிகளும் அனிருத் கச்சேரியை பக்கத்திலிருந்து பார்ப்பது போன்று பின் வரிசையில் குறைந்த விலையில் டிக்கெட் வாங்குகின்றவர்களும் அனிருத்தை அருகில் இருந்து பார்க்கும் வகையில் பின் வரிசைக்கு அருகில் ஒரு மேடை அமைக்க ஏற்பாடு செய்துள்ளார் அனிருத். முன் வரிசையில்
மேடையில் சுமார் இரண்டரை மணி நேரம் கச்சேரி நடக்கிறது என்றால் பின் வரிசையில் நடக்கும் மேடையில் சுமார் அரை மணி நேரம் கச்சேரியை நடத்துகிறார் அனிருத்.
இதனால் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் அனிருத்தை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இதே போன்று குறைந்த விலையில் டிக்கெட் எடுத்தவர்கள் கூட தன்னை அருகில் இருந்து பார்க்க வேண்டும் என்கின்ற அனிருத் நல்ல எண்ணம் இளையராஜா, ஏ ஆர் ரகுமான் போன்றவர்களுக்கு வர வேண்டும் என்கின்றனர் அனிருத் கச்சேரியில் பங்கேற்ற இசை ரசிகர்கள்.