ரத்தினவேலுவை கொண்டாடும் சாதியவாதிகளே… எச்சரிக்கும் அரசியல் பிரபலம்…

0
Follow on Google News

இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் மாமன்னன், இந்த படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவின் போது. அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசனை வைத்து கொண்டே தேவர் மகன் படம் குறித்து மாரிசெல்வராஜ் பேசிய சர்ச்சை பேச்சு மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் ஒரு குறிப்பிட்ட தரப்பினர் மத்தியில் மாரிசெலவராஜுக்கு கடும் எதிப்பும் கிளப்பியது. மேலும் தேவர் மகன் படம் குறித்து மாரிசெலவராஜ் சர்ச்சை கூறிய வகையில் பேசியதற்கு அப்போதே பலரும் எதிர்ப்பு தெரிவித்து மாரி செல்வராஜுக்கு பதிலடி கொடுத்து வந்தனர்.தேவர் மகன் படத்தில் இடம் பெற்ற இசக்கி, மாமன்னனாக இருந்தால் இப்படி இருக்குமோ அது தான் இந்த படம் என மாரிசெல்வராஜ் ஆடியோ வெளியிட்டு விழாவில் பேசியிருந்தார்.

மாரிசெல்வராஜின் இந்த பெரும் குழப்பத்தை உருவாகியுள்ளது, தேவர் மகனுக்கு மாமன்னனுக்கு என்ன சம்பந்தம், தேவர் மகன் படத்தில் இசக்கி கதாபாத்திரமும்,, பெரிய தேவர் கதாபாத்திரமும் ஒரே சமூகத்தை சேர்ந்த கதாபாத்திரம் போன்று தான் காட்சிகள் அமைத்திருக்கும் அப்படி இருக்கையில், இதில் இசக்கி கதாபாத்திரத்தில் என்ன குறையை கண்டார் மாரிசெல்வராஜ் என்கிற விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் இதற்கு முன்பு வந்த கர்ணன், பரியேறும் பெருமாள் போன்ற படங்கள் அமோக வரவேற்பபை பெற்று, வெற்றி பெற்று இருந்த நிலையில் மாமன்னன் படத்திற்கு மிக பெரிய எதிரிபார்ப்பு இருந்தது, ஆனால் ஆடியோ வெளியிட்டு விழாவில் மாரிசெல்வராஜ் பேசிய பேச்சுக்கு பின்பு, மாமன்னன் படத்திற்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மத்தியில் எதிர்ப்பு அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து, அந்த படத்திற்கு ஆதரவை விட எதிப்பு அதிகமானது.

இதனால் திரையரங்குகளில் எதிர்ப்பார்த்த வரவேற்பு மாமன்னன் படத்திற்கு இல்லை, இந்த நிலையில் தற்பொழுது, OTT யில் தற்பொழுது வெளியாகியுள்ள மாமன்னன் படத்தில் இடம்பெற்றுள்ள பகத் பாசில் நடித்துள்ள ரத்தினவேல் கதாபாத்திரத்தை குறிப்பிட்ட சில சமூகத்தினர் கொண்டாடி வருகிறார்கள். அதாவது வடிவேலு கதாபாத்திரத்தை பார்ப்பவர்கள் உருகும்படியும், ரத்தினவேல் கதாபாத்திரத்தை சாதி வெறி பிடித்த கொடூரமான வில்லனாகவும் காட்சி படுத்தியிருப்பார் மாரிசெல்வராஜ்.

ஆனால் தற்பொழுது வடிவேலு கதாபத்திரத்தை கேலி கிண்டல் செய்து ட்ரோல் செய்தும், ரத்தினவேல் கதாபாத்திரத்தை சாதி சார்ந்த பாடல் போட்டும் நெட்டிசன்கள் கொண்டாடி வருவது. மாரி செல்வராஜ் என்ன நோக்கத்திற்காக படம் எடுத்தாரோ, அதற்கு எதிராமராக அமைத்துள்ளது. இந்நிலையில் நெட்டிசன்கள் ரத்தினவேலை கொண்டாடி வருவதற்கு விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த வன்னியரசு தனது ட்வீட்டர் பதிவில்.

“மாமன்னன் திரைப்படம் வெளிவந்ததில் இருந்து சாதியவாதிகளுக்கு பதற்றம் பீறிட்டு, என்ன செய்வது என தெரியாமல் பிதற்றி வருகிறார்கள். வெளிவந்த நாளில் தென்மாவட்டங்களில் தியேட்டர்களை முற்றுகையிட்டன சாதியவாதிகள். அப்புறம தான் கதைக்களமே தென்மாவட்டம் இல்லை என தெரிந்து தலையை சொறிந்து கொண்டனர்.

இப்போது ரத்னவேல் கதாபாத்திரத்தை சாதியவாதிகள் கொண்டாடி வருகின்றனர். அதாவது, நாயை படுகொலை செய்வதை கொண்டாடுவது, சொந்த சாதிக்காரனையே படுகொலை செய்வதை கொண்டாடுவது என சாதிய மனநோயாளிகளாக மாறுகின்றனர் என தெரிவித்துள்ள வன்னியரசு, மேலும்.

அதுவும் அவரவர் சாதிகளை இணைத்து சாதிப் பெருமையோடு பதிவிட்டு வருகின்றனர். இதில் சாதியவாதிகளுக்கு மகிழ்ச்சி என்பது தற்காலிகம்தான். ஏனெனில், சாதியவாதியான ரத்னவேலுக்கு ஏற்படும் சோக முடிவை யாரும் மறந்திருக்க முடியாது. சாதியவாதிகளுக்கு நாளை இந்த முடிவுதான் ஏற்படும் என்பதை இயக்குனர் மாரி செல்வராஜ் எச்சரித்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று வன்னியரசு குறிப்பிட்டுள்ளார்.