பொது மேடையில் இளையராஜாவை அசிங்கப்படுத்திய வைரமுத்து..! என்ன காரணம் தெரியுமா.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் முதல் முதலில் படலாசிரியராக கவிஞர் வைரமுத்துவை தன் இசை மூலம் அறிமுகம் செய்து வைத்தவர் இசையமைப்பாளர் இளையராஜா. தொடர்ந்து சுமார் 7 வருடங்களை இருவரும் இணைத்து பணியாற்றி பல ஹிட் பாடல்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்துள்ளனர். ஒரு கட்டத்தில் வைரமுத்து பிசியான கவிஞராக உயர்ந்த பிறகு பாடல் வரிகளை திருத்தம் செய்ய இளையராஜாவிடம் இருந்து அழைப்பு வந்தால் சரியான நேரத்துக்கு வைரமுத்து செல்வதில்லை.

இதன் பின்பு இளையராஜா தானாகவே பாடல் வரிகளை திருத்தம் செய்துள்ளார், இது வாலி போன்ற பெரிய கவிஞர்கள் பாடல் எழுதும் போது கூட இளையராஜா திருத்தம் செய்வது வழக்கம், அந்த வகையில் இளையராஜாவின் திருத்தம் பற்றி கவிஞர் வாலி பல முறை பாராட்டு தெரிவித்துள்ளார். ஆனால் வைரமுத்துவுக்கு தனது பாடலை இளையராஜா திருத்தம் செய்வது பிடிக்கவில்லை, இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

ஒருகட்டத்தில் இருவருக்குமான கருத்து வேறுபாடு உச்சக்கட்டம் அடைந்து சண்டையிட்டு பிரிந்தவர்கள் சுமார் 30 வருடங்கள் கடந்து இதுவரை மீண்டும் இவர்கள் இணையவில்லை. இந்நிலையில் பொது மேடை ஒன்றி இளையராஜாவை அசிங்க படுத்தும் விதத்தில் வைரமுத்து பேசிய வீடியோ ஓன்று தற்போது வைரலாகி வருகிறது, அதில். எழுத்தாளர் ஜெயகாந்தன் மகளுக்கு திருமணம் நிகழ வேண்டும் என்று அவர் விரும்பியபோது,

எங்கள் மண்டபத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னேன், மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார். பொன்மணி மண்டபத்தில் வரவேற்பு என பத்திரிக்கை அடித்து அனைவருக்கும் அழைப்பு கொடுக்க சென்றிருக்கிறார். அதில் எனக்கும் அவருக்கும் தெரிந்த ஒரு இசையமைப்பாளரிடம் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்றிருக்கிறார் ஜெயகாந்தன். அழைப்பிதழை வாங்கிக்கொண்டு அண்ணே அவசியம் வருகிறேன் இது நம்ம வீட்டு கல்யாணம் என இசையமைப்பாளர் ஜெயகாந்தனிடம் தெரிவிக்கின்றார்.

பின்பு திருமண அழைப்பிதழை பிரித்து உள்ளே பார்க்கிறார் அந்த இசையமைப்பாளர், அதில் மண்டபத்தின் பெயரை பார்க்கின்றார், மன்னிக்க வேண்டும் நான் வரமுடியாது என அந்த இசையமைப்பாளர் தெரிவிக்கின்றார்.அதற்கு வரவில்லை என்றால் போ, என்று சொல்லிவிட்டு கிளம்பிய ஜெயகாந்தன் திரும்பி மீண்டும் வந்து நீதான் திருமணத்திற்கு வரப்போவது கிடையாது உனக்கு எதுக்கு பத்திரிக்கை என பிடிங்கிக் கொண்டு சென்றுவிட்டார்.

உடன் இருந்து பார்த்தவர்கள் தன்னிடம் சொன்ன தகவல் இது என பேசிய வைரமுத்து, வராத அவனுக்கு பத்திரிக்கை எதற்கு என்றும், சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ என்ற கண்ணதாசன் வரிகளை வாங்கி ஜெயகாந்தனை நான் பாராட்டி கொண்டேன் என இசைஞானி இளையராஜா பெயரை குறிப்பிடாமல் அவரை அசிங்கப்படுத்தும் விதத்தில் பொது மேடையியில் வைரமுத்து முன்பு பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருவது குறிப்பிட்டத்தக்கது.