பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதியை பயணி ஒருவர் தாக்க முயன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது, கர்நாடகா மாநிலம் பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதியின் மீது ஓடிவந்து ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். பின்னர், விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு படை வீரர்கள் தாக்குதல் நடத்த முயன்றவரை தடுத்து நிறுத்தினர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விஜய் சேதுபதி மீது எதற்காக தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது, இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்த நிலையில், இலங்கை தமிழர்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவாளர்கள் கடும் எதிப்பு தெரிவித்தனர் இதனை தொடந்து அந்த திரைப்படத்தில் நடிப்பதை விஜய் சேதுபதி தவிர்த்துவிட்டார்.
இதனை தொடர்ந்து விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்தியவர் ஈழ தமிழராக இருக்கலாம் என்றும், மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இந்து கடவுள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விஜய் சேதுபதி பேசியது இந்துக்கள் மத்தியில் கடும் எதிப்பு உருவானது, இந்நிலையில் இந்த சர்சைக்குரிய விஜய் சேதுபதி பேச்சுக்காக அவர் மீது தாக்குதல் நடைபெற்று இருக்கலாம் என்றும் பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விஜய் சேதுபதியைத் தாக்க முயன்ற நபரை விமான நிலையத் தொழில் பாதுகாப்புப் படையினர் பிடித்து விசாரித்ததில் விமான நிலையத்திலிருந்து விஜய் சேதுபதி வருவதற்காக அவரின் உதவியாளர் பாதையிலிருந்தவர்களை அகற்றியுள்ளார். அப்போது, பயணி ஒருவரை விஜய் சேதுபதியின் உதவியாளர் பிடித்து தள்ளியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பயணிக்கு விஜய் சேதுபதி உதவியாளருக்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பயணி ஒருவரை கீழே தள்ளிவிட்டு பின்பு, ஒரு சாரி கூட சொல்லாமல், பயணி மீது வாக்குவாதத்தில் ஈடுபட்டது அந்த பயணிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து விஜய் சேதுபதி அங்கே வந்ததும் பயணி ஒருவரை கீழே தள்ளிவிட்ட விஜய் சேதுபதி உதவியாளர் அவருடன் புறப்பட்டு சென்றார், இதன் பின்பு அந்த பயணி விஜய் சேதுபதி உதவியாளர் மீது தாக்குதல் நடத்த அவர்களை பின்னோக்கி ஓடி வந்துள்ளார்.
அப்போது விஜய் சேதுபதி அருகில் நடந்து சென்ற அவரின் உதவியாளர் மீது தாக்குதல் நடத்த முயன்ற போது எதிர்பாராத விதமாக விஜய் சேதுபதியும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இதனால் பயணி மற்றும் விஜய் சேதுபதி உதவியாளர் இருவருக்கு இடையே மோதல் உருவாக இருந்த நிலையில், உடனடியாக அங்கிருந்த பாதுகாப்பு படை வீரர்கள் தலையிட்டு அந்தச் சண்டையை தடுத்து நிறுத்தினர்.இதுதொடர்பாக விஜய் சேதுபதி உதவியாளர் காவல் நிலையத்துக்கு வந்து இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளிக்க விரும்பவில்லை. தங்களுக்குள் பேசித் தீர்த்துக் கொள்வதாக எழுத்துப் பூர்வமாக எழுதிக் கொடுத்துள்ளதாக கூறபடுகிறது.