டுபாக்கூர் வலைப்பேச்சு … பொய் சொல்லி வசமாக சிக்கி அவமானப்பட்ட பிஸ்மி, அந்தணன்..!

0
Follow on Google News

பிரபல வலைப்பேச்சு என்கின்ற யூட்யூப் சேனலில், அந்தணன், பிஸ்மி, சக்தி ஆகிய மூவரும் சினிமா குறித்த செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள். இந்த சேனல் பரபரப்பான சினிமா குறித்த தகவல்களை வெளியிட்டு வருவதால், சினிமா ரசிகர்களை கவர்ந்து, வலைப்பேச்சு யூடியூப் சேனல் பக்கம் இழுத்துள்ளது. இதனால் அதிக பார்வையாளர்கள் இந்த சேனலை பின் தொடர்கின்றனர்.

வலைப்பேச்சு சேனலில் பேசக்கூடிய பிஸ்மி மற்றும் அந்தணன் இருவரும் சினிமா குறித்த சொன்ன தகவல் நடந்து விட்டால், அன்றே சொன்ன வலைப்பேச்சு என்று மீண்டும் ஏற்கனவே சொன்ன தகவல்களை குறிப்பிட்டு நாங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான் என்பது போன்று ஒரு பிம்பத்தை பார்வையாளர்கள் மத்தியில் உருவாக்குவார்கள். இதை பார்ப்பவர்கள் ஆகா..! வலைப்பேச்சில் பிஸ்மி அந்தணம் சொன்னது அப்படியே நடந்து விட்டதே அப்படியானால் இவர்கள் சொல்வது உண்மைதான் என்கிற நம்பிக்கை பார்வையாளர்களுக்கு ஏற்படும்.

ஆனால் தற்பொழுது இவர்கள் அஜித் மற்றும் விஜய் குறித்து சொன்ன பொய்யான தகவல் ஒன்று தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது பிஸ்மி மற்றும் அந்தணன் இருவருக்கும் மிகப்பெரிய அவமானத்தை பெற்று தந்துள்ளது. மேலும் வலைப்பேச்சு ஒரு டுபாக்கூர் சேனல், இதில் பேசும் அந்தணன் மற்றும் பிஸ்மி இருவரும் ஒரு டுபாக்கூர் என்று நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

இவர்கள் பேசிய பொய்யான தகவல்களில், ஓன்று விஸ்வாசம் படம் வெளியாவதற்கு முன்பு பிஸ்மி பேசியதாவது, விஸ்வாசம் பற்றிய கதையில், அஜித்தின் வயதான தோற்றம் மற்றும் இளமை தோற்றம் என இரண்டு தோற்றத்தை பார்த்து அனைவரும் இது அஜித் அப்பா, மகன் கதை என்று தெரிவிக்கிறார்கள். ஆனால் நாம் விஸ்வாசம் படத்தின் நெருக்கமானவர்களிடம் விசாரித்ததில்,அவர்கள் என்ன சொன்னார்கள் என்றால்,

இது அண்ணன், தம்பி கதை. அண்ணன் அஜித் மும்பையில் இருக்கிறார், தம்பி அஜித் மதுரையில் இருக்கிறார். தம்பி அஜித் மதுரையிலிருந்து மும்பைக்கு அண்ணன் அஜித்தை சந்திக்க போகும்போது நடக்கும் விஷயம் தான் இந்தப் படத்தின் கதை என பிஸ்மி தெரிவித்தார் . ஆனால் விஸ்வாசம் படத்தில் கதை அப்படியில்லை, அதே போன்று அந்தணன் பேசிய மற்றொரு வீடியோவில், வலிமை படத்தில் எப்படி அம்மா சென்டிமென்ட் இருக்கின்றதோ அதே போன்று பீஸ்ட் படத்தில் தங்கச்சி சென்டிமென்ட்.

பீஸ்ட் படத்தில் இடைவேளைக்குப் பின்பு தங்கச்சி சென்டிமென்ட் தான் அந்த படத்தில் ஹைலைட்டாக இருக்கும் என்று சொல்கிறார்கள், என அந்தணன் பேசியிருந்தார். ஆனால் பீஸ்ட் படத்தின் கதை அப்படியில்லை. இந்நிலையில் தற்பொழுது அந்தணன் மற்றும் பிஸ்மி இருவரும் பேசிய இந்த வீடியோ வைரலாகி, இவர்கள் ஒரு டுபாக்கூர் என பலர் இந்த வீடியோவை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.