தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் சூர்யா இருவரும் அரசியல் குறித்த கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றவர்கள். விஜய், சூர்யா ஆகிய இருவரும் ஒவ்வொரு தடவை தெரிவிக்கும் அரசியல் கருத்துக்கள் மிகப்பெரிய சர்ச்சை ஏற்படுத்தி, அது விவாத வரை சென்றடையும். மேலும் இவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கு தொடர்புடைய அரசியல் கட்சிகள். சூர்யா மற்றும் விஜய்க்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைப்பார்கள்.
இந்த நிலையில் ஒவ்வொரு ஆடியோ வெளியீட்டு விழா, மற்றும் தான் நடிக்கும் சினிமாவில் சினிமாவில் அரசியல் குறித்த கருத்துக்களை தொடர்ந்து பேசி வந்த நடிகர் விஜய் சொந்தமான இடங்களில் கடந்த ஒரு வருடத்தில் முன்பு நடந்த வருமான வரி சோதனையின் போது, நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த விஜயை வருமானவரித்துறையினர் தட்டி தூக்கி தங்களுடைய காரில் ஒரு கைதியை அழைத்து வருவது போன்று அழைத்து வந்தனர்.
அதன் பின்பு சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படும் நிலையில், இந்த வருமான வரித்துறை சோதனைக்கு பின்பு எந்த ஒரு அரசியல் கருத்தும் விஜய் தெரிவிக்கவில்லை. பொதுவாக நடிக்கும் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் அரசியல் கருத்து தெரிவித்து வரும் விஜய், கடைசியாக அவர்கள் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தின் ஆடியோ நிகழ்ச்சியில் அரசியல் கருத்து தெரிவிக்க வேண்டும் என்பதற்காக ஆடியோ நிகழ்ச்சியே நடக்கவில்லை.
இந்நிலையில் தற்பொழுது தமிழ் சினிமா துறவினரை குறி வைத்து நடைபெற்று வரும் மெகா ரைட் என்று அழைக்கப்படும் வருமானவரித்துறை சோதனையில், நடிகர் சூர்யாவை குறிவைத்து அவரின் உறவினரான தயாரிப்பாளர்கள் எஸ் ஆர் பிரபு, மற்றும் ஞானவேல் ராஜா ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது.
இதில் தயாரிப்பாளர் நடிகர் சூர்யாவின் பினாமி என்று சினிமா வட்டாரத்தில் கூறப்படும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை, நடிகர் சூர்யாவை வலையில் சிக்க வைக்க தான் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மீது நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின் மூலம் நடிகர் சூர்யாவுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும், இதனால் இனிவரும் காலங்களில் நடிகர் விஜய்யை பின்பற்றி நடிகர் சூர்யா எந்த ஒரு அரசியல் கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருப்பார் என்றும் கூறப்படுகிறது.