வந்தது மிரட்டல்… தனுஷிடம் இருந்து விலகி தெறித்து ஓடும் கிசு கிசு நடிகைகள்..! என்ன காரணம் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆரம்ப கட்டத்தில் தனுஷ் மற்றும் அவரது அண்ணன் செல்வராகவன் இருவரும் தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை கொடுத்தனர். இதன் பின்பும் இருவரும் அடுத்தடுத்து தோல்வி படங்களை கொடுத்த நிலையில் அண்ணன் செல்வராகவன் சினிமாவில் இருந்து காணாமல் போனார்.

ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளை திருமணம் செய்த தனுஷ் தனது மாமனார் செல்வாக்கை பயன்படுத்தி அடுத்தடுத்து தோல்வி படங்களை கொடுத்தாலும், தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளை பெற்று தன்னை நிலை நிறுத்தி கொண்டார். மேலும் ரஜினிகாந்த் ரசிகர்கள் தனுஷுக்கு வழங்கிய ஆதரவு அவர் தோல்வி படங்களை கொடுத்தாலும் அடுத்தடுத்து அவருக்கான பட வாய்ப்புகள் அமைந்தது.

இந்நிலையில் ரஜினிகாந்த் செல்வாக்கு இல்லை என்றால் அண்ணன் செல்வராகவன் மாதிரி சினிமாவில் காணாமல் போயிருப்பார் தனுஷ், ஆனால் இந்த நன்றி உணர்வு கூட இல்லாமல் தனது மனைவி ரஜினிகாந்த் மகளுக்கு துரோகம் செய்யும் விதத்தில் சக நடிகைகளுடன் லூட்டி அடிப்பது, நட்சத்திர ஓட்டலில் தங்குவது, இரவு பார்ட்டிகளில் தங்குவது என மனைவியை மறந்து சக நடிகைகளுடன் தொடர்ந்து கிசு கிசுவில் சிக்கி வந்தார்.

இதனால் கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு உச்சக்கட்ட மோதலை அடைந்து இருவரும் பிரிவதாக அறிவித்தனர். குழந்தைகள் நலன் கருதும் மேலும் ரஜினிகாந்த் விருப்பத்துக்காக மீண்டும் ஐஸ்வர்யா – தனுஷ் தம்பதியினரை இணைத்து வைக்கும் முயற்சியில் ரஜினிகாந்த் குடும்பத்தினர் ஈடுபட்டனர், இந்த முயற்சியில் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் மிக தீவிரமாக ஈடுபட்டார்.

ஆனால் தனுஷ் திட்டவட்டமாக மறுத்ததை தொடர்ந்து தனுஷ்க்கு எதிரான ஆட்டத்தை தொடங்கியது ரஜினிகாந்த் குடும்பம். முதல் கட்டமாக தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி தமிழ் மற்றும் பிற மொழி படங்களில் இனி தனுஷ் புதிய படங்கள் ஏதும் நடிக்காதவாறு தயாரிப்பு நிறுவனகளுக்கு தகவல் சென்றது , மேலும் தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவுக்கு பின்பு தனுஷ் படங்களில் தற்போது வேலை செய்து கொண்டிருக்கும் கதையாசிரியர், ஒளிப்பதிவாளர் என ஒவ்வொருவராக பாதியிலே வெளியேறி வருகின்றனர்.

இதன் பின்னனியில் லதா ரஜினிகாந்த் இருப்பதாக கூறப்படும் நிலையில், தனுஷ் உடன் நெருக்கி பழகும் நடிகைகளுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள் பறிபோகும் வகையில் முக்கிய சினிமா பைனான்சியர் உடதவியுடன் ரஜினிகாந்த் குடும்பத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில், கடந்த சில தினங்களாக தனுஷ் இரவு பார்ட்டிக்கு அழைத்தால் கூட இதற்கு முன்பு அவருடன் லூட்டி அடித்து கிசு கிசுவில் சிக்கிய எந்த நடிகையும் போவது இல்லை என கூறப்படும் நிலையில்,

ஒரு காலத்தில் தனுஷ் உடன் சேர்ந்து அஜால் குஜாலில் ஈடுபட்டால் தனுஷ் தயாரிக்கும் படங்கள், அல்லது அவர் நடிக்கும் படங்களில் அவரது சிபாரிசில் தங்களுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என போட்டி போட்டு தனுஷ் உடன் லூட்டி அடித்த நடிகைகள், தற்போது தனுஷ் உடன் கிசு கிசுவில் சிக்கினால் பட வாய்ப்புகள் பறிபோகும் என்கிற நிலை உருவாகியுள்ளதால், தனுஷ் பழக்கத்தை முறித்து கொண்டு அவரிடம் இருந்து விலகி தெறித்து ஓடுவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுவது கூறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜயை நேருக்கு நேராக அசிங்கப்படுத்திய இயக்குனர் மிஸ்கின்..! அவமானத்தில் தலைகுனிந்த விஜய்…