தமிழ் சினிமாவை காக்க வந்த கடவுள் என சினிமா துறையினரால் அழைக்கப்பட்டு வரும் சினிமா பைனான்சியர் அன்புச் செழியனுக்கு சொந்தமான இடங்களில் நான்கு நாட்களாக மெகா ரெய்டில் ஈடுபட்டு வருகின்றனர் வருமான வரித்துறை அதிகாரிகள். டெல்லியில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட வருமானவரி துறையில் இருந்து வந்துள்ள ஸ்பெஷல் டீம் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாகவே சினிமா பைனான்சியர் அன்புச் செழியன் மற்றும் அவருடன் தொடர்புடைய தயாரிப்பாளர்கள் என அனைவரையும் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளது வருமான வரித்துறையை சேர்ந்த ஸ்பெஷல் டீம். வாட்ஸ் அப் உரையாடல்களை ட்ரேஸ் செய்து அதன் மூலம் தங்கள் வலையில் சிக்க வைத்துள்ளனர் வருமானவரித்துறை அதிகாரிகள்.
ஒரே நேரத்தில் அன்புச் செழியன் மற்றும் அவர் தொடர்புடைய பல தயாரிப்பாளர்கள் சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ள நிலையில், பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளது, மேலும் பல கோடி ரொக்க பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அன்புச் செழியன் உடன் முக்கிய தயாரிப்பாளர்கள் பலர் சிக்கி உள்ளனர்.
அதில் நடிகர் ரஜினிகாந்துக்கு நெருக்கமான தயாரிப்பாளர் ஒருவர் சிக்கி உள்ளார் என்றும், அவர் ரஜினிகாந்தை தொடர்பு கொண்டு ஒட்டுமொத்தமாக சிக்கி உள்ள தயாரிப்பாளர்கள் மற்றும் அன்பு செழியன் உட்பட அனைவரையும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும். நீங்கள் மனசு வைத்தால் நிச்சயம் முடியும், உங்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி டெல்லியில் உள்ள மத்திய அரசிடம் பேசுங்கள் என அந்த தயாரிப்பாளர் உதவி கேட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், ரஜினிகாந்த் இதற்கு, சாரி சார்….. இந்த மாதிரி விஷயங்களில் நான் தலையிடுவதில்லை என்று திட்டவட்டமாக மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஒழுங்காக வருமான வரி கட்டியதற்காக வருமான வரித்துறை சார்பில் சமீபத்தில் தான் ரஜினிக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது, அந்த நிலையில் நேர்மையை பின்பற்றி வருகின்றவர் ரஜினிகாந்த்.
இந்நிலையில் அரசாங்கத்தை ஏமாற்றி வரியைப்பு செய்து வரும் சினிமா பைனான்சியர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்வதில் ரஜினிகாந்துக்கு சிறிதும் விருப்பமில்லை என்றும், அவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள் என்ற கோபம் தான் ரஜினிகாந்த் இருக்கிறது என்று சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.