தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை நடக்காத மெகா ரெய்டு என்றும் செல்லும் அளவுக்கு, தற்பொழுது வருமான வரி துறை அதிகாரிகளால் சினிமா துறையை சேர்ந்தவர்கள் மீது வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வந்துள்ளது. டெல்லியில் இருந்து சுமார் 300க்கு மேற்பட்ட வருமான வரித்துறையை சேர்ந்த ஸ்பெஷல் டீம் இந்த சோதனையில் அதிரடியாக இறங்கி ஈடுபட்டு வந்துள்ளனர்.
பிரபல சினிமா பைனான்சியர் அன்பு செழியன் மற்றும் அவரின் தொடர்பில் இருக்கும் சினிமா தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் மீடியேட்டர் என்று அழைக்கப்படும் புரோக்கர்கள் உட்பட அனைவருக்கும் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தி வந்த அதிரடி சோதனையில் பல கோடி ரொக்க பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய கடந்த ஜூலை 31ஆம் தேதி கடைசி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு அடுத்த நாள் ஆகஸ்ட் 1ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக கலத்தில் இறங்கி சோதனையில் எடுப்பட்டுள்ளனர். இந்நிலையில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டு வந்த அதிகாரிகள் வியக்கும் அளவில் ஒரு சம்பவம் நடைபெற்று உள்ளது.
அன்புச்செழியனின் சகோதரர் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனைக்குச் சென்றுள்ளனர். அங்கே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ய அங்கிருந்தவர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் வருமான வரித்துறை அதிகாரி மற்றும் அங்கிருந்தவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நீங்களாக எங்கள் வேலையை செய்ய உள்ளே அனுமதித்தீர்கள் என்றால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.
தொடர்ந்து எங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தால் பெரும் பிரச்சனையை சந்திக்க நேரிடும் என வருமானவரித்துறை அதிகாரிகள் கடுமையாக எச்சரித்ததை தொடர்ந்து, அந்த அலுவலகத்தில் உள்ளே வருமான வரித்துறை அதிகாரிகள் அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் அங்கே ஒரு முக்கிய அறை கதவுகளை பார்த்த வருமானவரித்துறையினர் வியந்து போய் உள்ளனர். அந்த அறையின் கதவுகள் விஞ்ஞான முறையில் லேட்டஸ்ட் டெக்னாலஜியில் தயார் செய்யப்பட்டிருந்தது.
அந்த அறையின்கதவை வேறு யாருமே திறக்க முடியாது, அந்தக் கதவில் உள்ள ஸ்கேனரில் கட்ட விரல் ரேகை வைக்க வேண்டும், அதன் பின்பு கதவின் முன்பு இருக்கும் கேமராவில் முகம் காட்ட வேண்டும். இதில் அன்புச் செழியன் உட்பட ஒரு சிலர் மட்டுமே உள்ளே செல்லும்படி அவர்களின் கட்ட விரல் கைரேகையும் அவர்களின் முகம் புகைப்படமும் நவீன டெக்னாலஜி மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
பதிவு செய்யப்பட்டவர்கள் தவிர்த்து வேறு ஒருவர் ஸ்கேனரில் கைரேகை வைத்தாலோ, அல்லது கேமரா முன்பு அவர்களின் முகத்தை காண்பித்தாலோ, அந்தக் அறையின் கதவு திறக்காது. இந்த நிலையில் நீண்ட நேரத்திற்கு பின்பு சம்பந்தப்பட்டவர்களை அங்கே வரவழைத்து அவர்கள் கை கட்டைவிரல் ரேகையை ஸ்கேனரில் வைத்து, அடுத்து அவர்களின் முகத்தை கேமரா முன்பு காண்பித்த பின்பு அந்த கதவு திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் பின்பு அந்த அறையின் உள்ளே சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளார்கள். அப்போது சில முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அன்பு செழியன் தனது சகோதரரை வருமான வரித்துறையினர் கண்டு கொள்ள மாட்டார்கள் என்பதால் சகோதரர் அலுவலகத்தில் நவீன டெக்னலாஜியில் ஒரு அறையை ரகசியமாக உருவாக்கியதை வருமான வரித்துறையினர் கண்டுபிடிப்பார்கள் என்பதை அன்புசெழியன் எதிர்பார்க்கவில்லை என கூறப்படுகிறது.