கோபிசெட்டி பாளையத்தில் பிறந்து சினிமா ஆசையில் சென்னை வந்த பாக்யராஜ் கடும் போராட்டத்துக்கு பின் பாரதிராஜாவின் உதவி இயக்குனராக பணியாற்றினார். பாரதிராஜா இயக்கத்தில் முதல் முதலில் வெளியான 16 வயதினிலே படத்தில் பாக்யராஜ் உதவி இயக்குனராக பணியாற்றிய போது, அவரின் திரைக்கதை, வசனம் எழுதும் திறமையை பார்த்து வியந்து போனார் பாரதிராஜா, 16 வயதினிலே படத்தில் சிறிய வேடத்திலும் பாக்யராஜ் நடித்திருப்பார்.
இதனை தொடர்ந்து பாரதி ராஜா இயக்கத்தில் அடுத்தடுத்து வந்த கிழக்கே போகும் ரயில், சிவப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பாக்யராஜ் பணியாற்றி போது, பாக்யராஜ் தன்னை விட்டு வெளியேறி தனியாக இயக்குனராக பணியாற்றினால் பெரிய உயரத்திற்கு சென்று விடுவார் என நினைத்து, உனக்கு நடிப்பு தான் சரியாக இருக்கும் என பாக்யராஜை தனது படத்தில் சிறு சிறு வேடங்கள் கொடுத்து நடிக்க வைத்து தன்னுடனே வைத்து கொண்டார் பாரதி ராஜா.
அடுத்ததாக பாரதிராஜா தனது இயக்கத்தில் பாக்யராஜை கதாநாயகனாக வைத்து புதிய வார்ப்புகள் என்கிற படத்தை இயக்கினார், இந்த படத்தின் திரைக்கதை மற்றும் வசனம் பாக்யராஜ் எழுதியது, இதனை தொடர்ந்து நடிகை பிரவீனா உடன் பாக்கியராஜ் ஏற்பட்ட நட்பின் காரணமாக, பிரவீனா பாக்கியராஜ் சினிமா வாழ்க்கைக்கு உதவி செய்துள்ளார், அதில் பாக்யராஜ் தந்திரமாக ஏமாற்றப்பட்டு வருவதை அவரிடம் எடுத்து தெரிவித்துள்ளார்.
நீ திரைக்கதை, வசனம் எழுதுகிறாய், நீ நடிக்கவும் செய்கிறாய், பிறகு என் இயக்குனர் என யாரோ ஒருவரின் பெயரில் நீ இதை எல்லாம் செய்ய வேண்டும், உன்னுடைய உழைப்பை சிலர் தந்திரமாக அபகரித்து வருகிறார்கள் என பாக்யராஜ் அவர்களிடம் நடிகை பிரவீனா எடுத்து கூறி, நீயே இயக்குனராக படம் இயக்கலாம், உனக்கு அதற்கான அணைத்து தகுதியும் இருக்கிறது என பிரவீனா தெரிவிக்க, அதற்கு தயாரிப்பாளர் வேண்டாமா, என்னை நம்பி யார் படம் தயாரிப்பது என பாக்கியராஜ் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அதற்கான அணைத்து ஏற்பாடுகளும் நான் செய்கிறேன் என உறுதியளித்த நடிகை பிரவீனா, இயக்குனராக பாக்யராஜ் இயக்கிய முதல் படத்திற்கு தயாரிப்பாளர் மற்றும் அணைத்து உதவிகளையும் செய்து தந்தார் நடிகை பிரவீனா, இதனை தொடர்ந்து பாக்கியராஜ் முதலில் இயக்குனராக அறிமுகமான சுவரில்லா சித்திரம் என்கிற திரைப்படம் மிக பெரிய வெற்றியை பெற்றது, இந்த படத்தில் பாக்கியராஜ் நடித்தும் இருப்பார்.
இதனை தொடர்ந்து இயக்குனர், நடிகர், திரைக்கதை,வசனம் என அனைத்திலும் கொடி கட்டி பறந்த பாக்கியராஜ் தமிழ் சினிமாவில் முன்னனி இடத்தை பிடித்தார், தான் சினிமாவில் வெற்றி பெறுவதற்கு உதவியாக இருந்த நடிகை பிரவீனாவை திருமணம் செய்து கொண்டார் பாக்யராஜ், ஆனால் மஞ்சள் காமாலை நோய் காரணமாக தனது 25 வயதில் திருமணமான இரண்டே வருடத்தில் நடிகை பிரவீனா மரணம் அடைத்தார், இதன் பின்பு பூர்ணிமாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் பாக்கியராஜ்.