உடனே 26 கோடி இப்பவே வேண்டும்.! வேறு வழியின்றி கடன் தொல்லையால் சிவகார்த்திகேயன் எடுத்த முடிவு..! கண்ணீருடன் சோகத்தில் குடும்பத்தினர்..

0
Follow on Google News

சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து வெற்றி கொடி நாட்டி வெற்றி நடைபோட்டவர் நடிகர் சிவகார்த்திகேயன், மெரினா படத்தில் இயக்குனர் பாண்டியராஜன் மூலம் வெள்ளி திரைக்கு அறிமுகமான சிவகார்த்திகேயன், தொடர்ந்து கேடி பில்லா கேலடி ரங்கா, எதிர்நிச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்து நட்சத்திர அந்தஸ்தை பெற்ற சிவகார்த்திகேயன், அடுத்து வந்த ரஜினிமுருகன் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது,

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் சம்பளமும் கிடு கிடுவென உயர்ந்தது, இந்நிலையில் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தால் பெரும் தொகையை சம்பாரித்து விடலாம் என நினைத்து தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயன், தொடர்ந்து பல படங்களை சொந்தமாக தயாரித்தார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான ரெமோ, வேலைக்காரன் மற்றும் சீமராஜா ஆகிய மூன்று படங்கள் படுதோல்வி அடைந்து பெரும் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து பெரும் கடன் சுமையில் இருந்த சிவகார்த்திகேயன் தயாரிப்பில் டாக்டர் மற்றும் டான் படம் ஆகிய படங்களை முழுக்க நம்பி இருந்தார். இந்த படங்கள் வெளியான பின்பு அதனால் வரும் லாபத்தில் கடனை அடைத்து விடலாம் என சிவகார்த்திகேயன் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தின் முதல் காட்சி வெளியாகவில்லை,

காரணம் இந்தப் படம் வெளியாக வேண்டும் என்றால் தனக்கு தரவேண்டிய 26 கோடி ரூபாய் கொடுத்தால் தான் வெளியிடுவேன் என டாக்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் அந்த படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனிடம் தெரிவித்திருந்தார்.கடைசி நேரத்தில் கழுத்தில் கத்தியை வைத்தது போல் அந்த நேரத்தில் 26 கோடி ரூபாய்க்கு எங்கே செல்வது என சிவகார்த்திகேயன் குழம்பிப் போயிருந்தார். என்னடா இது சோதனைக்கு மேல் சோதனையா என சிவகார்த்திகேயன் குடும்பத்தினரும் கண்ணீருடன் சோகத்தில் மூழ்கினர்.

படம் வெளியான பின்பு அவரும் பணத்தில் உங்களுக்கு தருகிறேன் என சிவகார்த்திகேயன் தெரிவித்தும் அதற்கு ஒப்பு கொள்ளவில்லை படத்தின் இணை தயாரிப்பாளர். இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஒரு இக்கட்டான சுழலில் இருப்பதை அறிந்த தயாரிப்பாளரும் பைனான்சியர் மதுரையைச் சேர்ந்த அன்புச்செழியன் உதவ முன் வந்துள்ளார், அப்போது உனக்கு நான் 26 கோடி ரூபாய் தருகிறேன் ஆனால் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்ள வேண்டும் என அன்புசெழியன் நிர்ப்பந்தம் செய்துள்ளார்.

அதற்கு சிவகார்த்திகேயன் என்ன நிர்பந்தம் என கேட்க, நான் கூறும் நபருக்கு நீ கால்சீட் தர வேண்டும், சம்பளம் அந்தப்படத்துக்கு உனக்கு 26 கோடி ரூபாய் என அன்புச்செழியன் பேசியுள்ளார். என்ன செய்வது என தெரியாமல் கடும் சிரமத்தில் இருந்த சிவகார்த்திகேயன் அந்த நேரத்தில் தனது டாக்டர் படம் வெளியாக வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அன்புச்செழியன் விதித்த நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டார்.

26 கோடி ரூபாய் வாங்கிக்கொண்டு அன்புசெழியன் விதித்த நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டு, தனது பிரச்சனையை முடித்துவிட்டு டாக்டர் படத்தை வெளியிட்டார் சிவகார்த்திகேயன். அந்த படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து சிவகார்த்திகேயனுக்கு லாபத்தையும் பெற்று தந்தது. ஆனால் அன்புச்செழியன் தான் கைகாட்டும் நபருக்கு நீ கால்ஷீட் தர வேண்டும் என நிபந்தனை விதித்தது வேறுயாருமல்ல கடந்த ஆறு மாதமாக சிவகார்த்திகேயனிடம் நடையா நடந்து கால்சீட் கேட்ட இயக்குனர் ஒருவர் தானம்.