அந்த நடிகைக்காக மதம் மாறிய கமல்ஹாசன்.. யார் அந்த நடிகை தெரியுமா.? பரபரப்பு தகவலை வெளியிட்ட சினிமா பிரபலம்..

0
Follow on Google News

ஐந்து வயது சிறுவனாக களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்த சுமார் 60 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தொடர்ந்து தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் கிசு கிசுவில் சிக்கி வரும் கமல்ஹாசன், தன்னை பற்றி வெளியாகும் கிசு கிசு செய்திகளை பொருட்படுத்தாமல் கடந்து சென்று விடுவார்.

இந்நிலையில் சமீபத்தில் சினிமா துறையை சேர்நத் பிரபல நடிகர் கமல்ஹாசன் முன்பையில் ஒரு நடிகையை திருமணம் செய்வதற்காக மதம் மாறிய சம்பவத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார், நடிகர் கமலஹாசன் தனது 24 வயதில் நடிகை வாணி கணபதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார், நாட்டிய கலைஞரான வாணி கணபதி – கமல்ஹாசன் தம்பதியினர் பத்து வருட திருமண வாழ்க்கைக்கு பின் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இந்நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ஏக் து ஜே கேலியே என்கிற ஹிந்தி படம் மிக பெரிய வெற்றியை பெற்றது ஹிந்தியிலும் பிசி நடிகரானர் கமல்ஹாசன் அப்போது, மும்பையை சேர்ந்த ஹிந்தி நடிகை சரிகாவை காதலித்து வந்தார் கமல்ஹாசன், இருவரும் காதலித்து வந்த நிலையில் இவர்களுக்கு 1986ம் ஆண்டு சுருதிஹாசன் என்கிற பெண் குழந்தை பிறந்தது, முதல் குழந்தை பிறந்து அடுத்த இரண்டு ஆண்டுகளில் 1988ம் ஆண்டு சட்டப்படி சரிகாவை கமல்ஹாசன் திருமணம் செய்துகொண்டார்.

கமல்ஹாசன் – சரிகா தம்பதியர் மகள் சுருதி பிறந்த இரண்டு வருடங்களுக்கு பின்பு தான் கமலஹாசன், சரிதாவை திருமணம் செய்து கொண்டதாக பேசப்பட்டு வந்த நிலையில், சுருதிஹாசன் பிறப்பதற்கு முன்பே நடிகை சரிகாவை ரகசியமாக கமல்ஹாசன் திருமணம் செய்து கொண்ட தகவலை சமீபத்தில் சினிமா துறையை சேர்ந்த பிரபலம் பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டுள்ளார், சரிகாவை கமல்ஹாசன் காதலித்து வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தபோது சரிகா சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளார்.

அதில் சரிகா தன்னை கமலஹாசன் திருமணம் செய்ய வேண்டும் என்றால், இஸ்லாமியராக மதம் மாற வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார். இதனை தொடர்ந்து முன்பையில் ரகசியமாக இஸ்லாமியராக மதம் மாறிய கமல்ஹாசன், இஸ்லாமிய முறை படி நடிகை சரிகாவை ரகசியமாக திருமணம் செய்துள்ளார், இந்த ரகசிய திருமணத்துக்கு பின்பு தான் கமல்ஹாசன்- சரிகா தம்பதியருக்கு சுருதிஹாசன் என்கிற பெண் குழந்தை பிறந்துள்ளது, இதன் பின்பு சட்டபடி கமல்ஹாசன்- சரிகா இவருடைய திருமணம் நடைபெற்றதாக கூறபடுகிறது.