கர்நாடகாவில் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி,பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிந்து வருவதற்கு போட்டியாக அங்கே இந்து மாணவ, மாணவிகள் காவி துண்டு அணிந்து வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விசிக கட்சி தலைவர் திருமாவளவன் இந்த விவகாரம் குறித்து நாடாளுளுமன்றத்தில் பேசியதாவது, நாடு முழுவதும் இன்று பள்ளி மாணவர்களிடையே பிரிவினை வாதத்தை ஏற்படுத்துவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.
இதன் காரணமாக ஆர்எஸ்எஸ் உள்ளிட்டட அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இஸ்லாமிய பெண்கள் அரசியமைப்பு சட்டம் தருகிற உரிமையின் அடிப்படையில் உடை சுதந்திரத்தை பெற்றிருக்கிறார்கள். அதை தடுப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். இந்த போக்கை தடுத்து நிறுத்தியாக வேண்டும் இது நாட்டை பிளவுபடுத்துகிற முயற்சி.
ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் இந்தியர்களை இந்துக்கள் முஸ்லீம்கள் இந்துகள் கிறித்துவர்கள் என்று பிரிக்கிறார்கள் மேல் ஜாதி கீழ் ஜாதி என்று பிரிக்கிறார்கள். பிளவு படுத்துவதும் பிரித்தாலும் சூழ்ச்சியே ஆர்எஸ்எஸ் சங்பரிவார் கும்பலின் சூழ்ச்சியாக உள்ளது. இந்த போக்கை வன்மையாக எதிர்க்கிறேன், ஜெய் ஸ்ரீராம் என்னும் முழக்கத்தின் மூலம் இந்த நாட்டை பிளவுப் படுத்தக்கூடிய சக்திகளுக்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவிக்கிறேன்.
இதற்கு மாற்றுக்கு குரலாக ஜெய் பீம் மற்றும் அல்லாகு அக்பர் இன்று நாடு முழுவதும் ஒலிக்கிறது, எனவே இந்த அவையில் நான் ஓங்கி முழங்குகிறேன் ஜெய் பீம் அல்லாகு அக்பர் என திருமாவளவன் நாடாளுமன்றத்தில் பேசியதற்கு, திரைப்பட இயக்குனர் பேரரசு, பாராளுமன்றத்தில் கர்நாடக முஸ்லிம் மாணவியின் உடைக்காக குரல் கொடுத்தவர் அப்படியே நம் தமிழ் மாணவி லாவண்யாவின் உயிர்க்காக குரல் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த இரு தினங்களுக்கு முன் தமிழகத்தில் மூட நம்பிக்கை சட்டம் கொண்டு வர வேண்டும் என திருமாவளவன் தெரிவித்த கருத்துக்கு பதில் கொடுக்கும் விதத்தில் அப்படியே ஜாதியை ஒழிப்பதற்கும் சட்டம் கொண்டு வந்தால் நல்லா இருக்கும். தமிழ் நாட்டில் தமிழன் என்ற ஒரு ஜாதி மட்டும் இருக்க வேண்டும் என திரைப்பட இயக்குனர் பேரரசு தெரிவித்தது குறிப்பிடதக்கது.