எப்படி பா.ரஞ்சித் அப்படி சொல்லலாம்… பொங்கி எழுந்த சுப .வீரபாண்டியன்…

0
Follow on Google News

இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் மாமன்னன், இந்த படம் குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித். மாமன்னன் திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது என தெரிவித்துள்ள பா.ரஞ்சித்.

மேலும், உண்மையாகவே தனித்தொகுதி MLAக்களுக்கு அதிகாரம் என்னவாக இருக்கிறது? ஏன் பட்டியலின மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க பயப்படுகிறார்கள்? சமூக நீதி பேசுகிற கட்சிகளில் இருந்தும் ஊமைகளாக இருப்பதற்கான காரணம் என்ன?அவர்களுக்கான அங்கீகாரமும், அதிகாரமும், பிரதிநிதித்துவமும் சரியாக தரப்படுகிறதா? என்பதற்கான சான்று மாமன்னன்.

உண்மையாகவே பெரும் பாராட்டுகுரியவர் நடிகர், தயாரிப்பாளர், அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் திமுக கட்சியில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார், அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம் என பா ரஞ்சித் திமுகவில் சாதி பாகுபாடு இருப்பதாக தெரிவித்தது மிக பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.

இந்நிலையில் பா.ரஞ்சித்தின் இந்த கருத்துக்கு பதிலடி தரும் விதத்தில் பேசியுள்ள திராவிட இயக்கத்தை சேர்ந்த சுப.வீரபாண்டியன், பா. ரஞ்சித்தின் இந்த அறிக்கை ஒருவிதமான விஷமத்தனமாக இருக்கிறது என தெரிவித்துள்ள சுப வீரபாண்டியன். மேலும் திமுகவில் இன்று சவாலாக இருக்கும் சாதி பிரச்சனையை இந்த படம் விளக்குகிறது என்கிறார்.

தமிழ்நாட்டில் இருக்கும் எந்த கட்சியிலும் சாதி பிரச்சனையில்லை, சாதிக்காகவே இருக்கின்ற கட்சிகளில் சாதி பிரச்சனையில்லை, ஆனால் திமுகவில் மட்டும் தான் சாதி பிரச்சனை சவாலாக இருக்கின்றது என்பது போன்று சொல்வது உள்நோக்கம் உடையத, விஷமத்தனமானது என்று கடுமையாக தனது கண்டனத்தை பதிவு செய்த சுப வீரபாண்டியன்.

மேலும் திமுகவை இழிவு படுத்துவதற்கு திமுகவின் முக்கிய பொறுப்பில் இருப்பவர் திரைப்படம் எடுப்பாரா.? அனைத்து கட்சிகளிலும் இந்த சாதி வேறுபாடு இருக்கின்றது. எந்த கட்சிகளிலும் இருந்தாலும் அது ஒழிக்க வேண்டும் என்று ஒரு கட்சியில் தலைமைக்கு அடுத்த இடத்தில் இருக்கக்கூடிய ஒருவர் இந்த படத்தை எடுக்கிறார் என்றால், அதை நாம் பாராட்ட வேண்டும். ஆனால் அது திமுகவில் மட்டும் தான் இருப்பது போன்று பா ரஞ்சித் பேசுவது என்ன நியாயம்.?

நாங்கள் நேரடியாகவே கேட்கிறோம் புதிய தமிழக கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அவர்கள் அருந்ததியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்ததை எதிர்த்தாரா.? இல்லையா.? பா ரஞ்சித்தும் கூட அருந்ததியர் இட ஒதுக்கீடு பற்றி வெளிப்படையாக அவருடைய கருத்தை தெரிவிக்க வேண்டும் என தெரிவித்த சுப வீரபாண்டியன். மேலும் குடியும் இல்லை, சாதியும் இல்லை, சனாதனமும் இல்லை என்று பட்டியல் இன மக்களின் கட்சியின் இருந்து உரத்து பேசுகின்ற திருமாவளவன், அத்தனை பெரிய சவாலாக திமுகவில் சாதி பிரச்சனை இருந்தால் அவர் உடன் இருப்பாரா.?

இன்றைக்கு திமுகவில் எந்த சாதி பிரச்சனையும் இல்லை, யாருக்கும் சாதி உணர்வே இல்லை என்றெல்லாம் நான் சான்றிதழ் கொடுக்க வேண்டியது இல்லை, சாதி என்பது உடன் பிறந்த அழுக்கு, அது நமக்கு ஊட்டப்பட்டு இருக்கிறது. அது களையப்பட வேண்டும், அது வேறெடுக்கப்பட வேண்டும் , அது எல்லா கட்சியிலும் இருப்பவர்களுக்கு பொருந்தும் என்பதே சரியானது, ஆனால் வேண்டுமென்றே ஏதோ திமுகவில் மட்டும் இது இருப்பது போன்று காட்டுவது மிகுந்த உள்நோக்கம் உடையது, பட்டியலினர் மக்களை திராவிட இயக்கத்திற்கு எதிராக மாற்ற வேண்டும் என்கின்ற சிலருடைய எண்ணம் தான் இது என சுப வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.