இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் விரைவில் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா போன்ற பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருக்கின்றனர். சோழ மன்னர்களின் வரலாற்று சிறப்புமிக்க கதையை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தெலுங்கு படம் இயக்குனர் ராஜமௌலியின் பாகுபலி படத்திற்கு பின்பு தமிழ் சினிமாவின் தமிழ் சினிமா மிகவும் பின்தங்கியுள்ளது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் பாகுபலியை மிஞ்சும் அளவுக்கு எடுக்கப்பட்டது என்றும். இது தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்யும் என்றும் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் விரைவில் திரைக்கு வர இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியானது. இது உண்மையான பொன்னியின் செல்வன் கதை இல்லை, மணிரத்தினத்தின் கற்பனை கதை என்கிற பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. மேலும் மக்களின் எதிர்பார்ப்பை இந்த படத்தின் டீசர் பூர்த்தி செய்யவில்லை. இதே போன்று பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதில் பொன்னின் நதியின் என்கிற பாடல் வெளியிடப்பட்டது. திரைப்படத்தின் பாடல் என்பது, அந்த படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் இருக்க வேண்டும், ஆனால் பொன்னி நதியின் பாடல், படத்தின் கதைக்கும், அந்த கட்சிக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல், மக்கள் மனதில் இடம் பிடிக்க தவறிவிட்டது. இது மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த மக்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.
இந்நிலையில், இந்தியாவே வியந்து பார்க்கும் இயக்குனர் ராஜமவுலி பொன்னியின் செல்வன் குறித்து தெரிவித்ததாவது. தனக்கு வெப் தொடர்கள் எடுக்க வேண்டும் என்கின்ற ஒரு எண்ணம் இருந்தது. தற்போது இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தை பல நாட்களாகவே வெப் தொடராக எடுத்து, அதை ஓடிடியில் வெளியிட வேண்டும் என்கின்ற எண்ணம் எனக்கு இருந்தது.
அதை வெப் தொடராக எடுத்தால் மட்டும் தான், பொன்னியின் செல்வன் கதையை எளிதாக சொல்ல முடியும். ஒரு வெப் தொடர் என்பது சுமார் 20 மணி நேரம் கூட செல்லலாம். ஆனால் திரைப்படம் என்பது அவ்வளவு நேரம் செல்ல முடியாது. அப்படி இருக்கையில் இது போன்ற கதைகளை வெப் தொடர் மூலமாக ஓ டி டி இல் வெளியிடுவது தான் சரியான தளமாக இருக்கும் என ராஜமௌலி தெரிவித்துள்ளார்.
எனவே இரு ஒரு வெப் தொடராக எடுக்க வேண்டிய பொன்னியின் செல்வன் படத்தை சுருக்கி அதை திரைப்படமாக எடுத்து மணிரத்தினம் தப்பு செய்துவிட்டாரா என்கின்ற விமர்சனம் ராஜமௌலி பேட்டிக்கு பின்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.