இன்று தமிழ் சினிமா இயக்குனர்கள் பெரும்பாலானோர் சொந்தமாக கதையை எழுதி அதற்கான திரைக்கதையை அமைத்து ஒரு படத்தை உருவாக்குவதற்காக முயற்சியில் பெரும்பாலும் ஈடுபடுவதில்லை. அந்த அளவுக்கு அறிவு சார்ந்த இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் மிக குறைவு என்று சொல்லும் அளவுக்கு, எளிதான பிற மொழி படங்களில் இருந்து கதையை சுட்டு, அல்லது காட்சிகளை சுட்டு படம் ஆக்குவதை வழக்கமாக கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் தற்பொழுது பெரும்பாலும் தமிழ் சினிமாவில் வெளியாகும் புதிய படங்கள் கொரியன் சினிமாவில் வெளியான படத்தின் கதைகளை சுட்டே படம் ஆக்கப்பட்டு வருவது மிகப்பெரிய கேலிக்கூத்தாக அமைந்துள்ளது. இந்த நிலையில் பிற மொழி படங்களில் குறிப்பாக அதிகமாக கொரியன் சினிமாவில் இருந்து தமிழ் இயக்குநர்கள் கதையையும் காட்சிகளையும் சுட்டு படம் ஆக்குவதற்கு முக்கிய காரணமாக இருப்பது என்னவென்றால்,
கொரியன் சினிமாக்கள் தமிழ் சினிமாவின் சாயலில் எடுக்கப்படுவது தான் என்பது ஒரு முக்கிய காரணம், மேலும் கலாச்சாரம் உறவு பண்பாடு இவை அனைத்துமே தமிழர்களின் தொன்மையை ஒட்டி கொரியன் மக்களின் வாழ்ந்து வருவது கொரியன் சினிமாக்களும் தமிழ் சினிமா சாயலில் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரியன் மக்களின் பண்பாடு, கலாச்சாரம், தமிழ் மக்களின் பண்பாடு கலாச்சாரமும் ஒரே மாதிரி தான் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
அந்த வகையில் கிட்டத்தட்ட தமிழர்களின் கலாச்சாரம் தொன்மை பண்பாடு இவை அனைத்துமே கொரியன் சினிமாவில் இடம் பெறுவதால், தமிழ் சினிமா இயக்குனர்கள் எளிதாக கொரியன் சினிமா படங்களின் கதைகளையும் காட்சிகளையும் திருடி படமாக்கி வருகிறார்கள். அதே நேரத்தில் கொரியன் சினிமா இயக்குனர் யாரும் தமிழர்களின் கலாச்சாரம் பண்பாடும், கொரியர்களின் கலாச்சாரம் பண்பாடும ஒரே மாறியாகவும், தமிழ் சினிமாவும் ஒரே சாயலில் இருப்பதால்,
தமிழ் சினிமாவின் கதைகளையோ காட்சிகளையோ சுட்டு இதுவரை படமாக்கப்பட்டதாக எந்த ஒரு தகவலும் இல்லை, ஆனால் தமிழ் சினிமா இயக்குனர்கள் மிக எளிதாக கொரியன் சினிமாவையும் சுட்டு இங்க உள்ள நடிகர் நடிகைகளையும் மட்டும் மாற்றி ஏதோ இவர்கள் சொந்த கற்பனையில் உதித்த திரைப்படம் போன்று,, இவர்கள் இந்த காட்சியை படமாக்க மிகப்பெரிய சிரமப்பட்டது போன்று ஒரு பில்டப்பை கொடுத்து மக்களை ஏமாற்றி வெற்றியை பெற்று சென்று விடுகிறார்கள்.
இருந்தாலும் ஒரு கதையையும், காட்சியையும் திருடி படமாக்கப்படுவதற்கு அந்த சம்பந்தப்பட்ட இயக்குனர் வெட்கப்பட வேண்டும், ஆனால் அதையே இவர்கள் நான் பார்த்த கொரியன் படத்தில் இன்ஸ்பிரேஷன் ஆகி இந்த படத்தை எடுத்தேன் என்று சமாளிப்பது என்பது தான் செய்யும் திருட்டுத்தனத்தை நியாயப்படுத்தும் தவறான செயல் என்கின்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
தமிழ் தமிழ்நாட்டில் எத்தனையோ மண் சார்ந்த கதைகள் இன்னும் படமாக்கப்படாமல் இருக்கிறது அப்படி இருக்கையில், இன்ஸ்பிரேஷன் என்கின்ற ஒரு வார்த்தையை பயன்படுத்திக் கொண்டு யாரும் சொந்தமாக படம் மற்றும் கதைகளை தயார் செய்யாமல் ஏதோ ஒரு படத்தில் சுட்டு படம் எடுக்கும் அவலம் தமிழ் சினிமாவில் தற்போது பெரும்பாலும் நிகழ்ந்து வருவது மிகப்பெரிய வேதனைக்குரிய சம்பவம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.