மருத்துவமனையில் இருந்து தொடர் அழைப்பு.. தாமதமாக வந்த இளையராஜா… அதற்குள் உயிர் பிரிந்த சோகம்..

0
Follow on Google News

சமீப காலமாக இளையராஜா பலவேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார், அந்த வகையில் சமீபத்தில் மரணம் அடைந்த இயக்குனர், நடிகர் மனோபாலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்த இளையராஜா பேசி வெளியிட்ட வீடியோவில், என்னை சந்திக்க நான் வரும் வழியில் கோடம்பாக்கம் பாலம் அருகே வாய்ப்புக்காக காத்திருந்த பல இயக்குனர்களில் மனோ பாலாவும் ஒருவர் என இளையராஜா பேசியிருந்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

, இந்நிலையில் பிரபல பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் கடந்த 2011 ஆம் ஆண்டு உடல் நல குறைவினால் உயிரிழந்தார். அவர் உயிரிழப்பதற்கு முன்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதில் அவர் உயிர் இழப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தீவிர சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு வந்தது. அந்த நேரத்தில் தான் இளையராஜாவை பார்க்க வேண்டும் தன்னுடைய விருப்பத்தை மலேசியா வாசுதேவன் அவருடைய குடும்பத்தினரிடம் தெரிவித்து இருந்திருக்கிறார்.

மரணம் அடைவதற்கு கடைசி நேரத்தில் மலேசியா வாசுதேவன் ஐ சி யூ வில் சிகிச்சை பெற்று வந்த போது இளையராஜாவின் மனைவி ஜீவா நேரில் சந்தித்து மலேசியா வாசுதேவனின் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார். அப்போது மலேசியா வாசுதேவனின் மனைவி, இளையராஜாவின் மனைவி ஜீவாவிடம் தன்னுடைய கணவர் மலேசியா வாசுதேவன், இளையராஜாவை நேரில் பார்க்க ஆசைப்படுகிறார்.

அவர் வந்து நேரில் பார்த்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் ஐ சி யு வில் ஒரு வாரம் மலேசியா வாசுதேவன் சிகிச்சை பெற்ற காலத்தில் இளையராஜா அங்கே வந்து மலேசியா வாசுதேவனை பார்க்கவில்லை. ஒரு கட்டத்தில் மலேசியா வாசுதேவனின் உடல்நிலை படுமோசமாகிவிட்ட நிலையில் இனி ஒன்றும் செய்ய முடியாது என மருத்துவர்களும் தெரிவித்துவிட்டனர்.

அந்த நேரத்தில் மலேசியா வாசுதேவனின் குடும்பத்தினர் அனைவரும் அப்பாவின் கடைசி நேரத்தில் அவர் உடனே இருந்து நேரத்தை செலவு செய்ய முடிவெடுத்துள்ளனர். அப்படி ஒரு காலகட்டத்தில் தான் இளையராஜா, மலேசியா வாசுதேவனை பார்க்க வந்தபோது மலேசியா வாசுதேவன் இறந்துவிட்டார்.

மலேசியா வாசுதேவனை பார்க்க மருத்துவமனைக்கு இளையராஜா உள்ளே வந்த உடனே அவரைப் பார்த்து மலேசியா வாசுதேவனின் மகன் உங்களுக்காக தான் அப்பா காத்திருந்தார், இப்பதான் உங்களால் வர முடிந்ததா.? உயிர் போயிடுச்சு போங்க.! என்று சோகத்துடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஒரு பேட்டியில் வெளிப்படுத்தி இருந்த மலேசியா வாசுதேவனின் மகன் ஹிதேந்திரன்.

நான் அப்படி இளையராஜாவிடம் தெரிவித்தது அது அவர் மேல் உள்ள கோபம் அல்ல, ஆதங்கம் தான் என்றும், ஆனால் அதற்கு பிறகு அப்பாவின் இறுதிச்சடங்கு முடியும் வரை கூடவே இளையராஜா இருந்ததாகவும். மேலும் பொதுவாக இது போன்ற இறுதி சடங்கு விஷயங்களுக்கு எல்லாம் இளையராஜா போக மாட்டார் ஆனால் என் தந்தை மலேசியா வாசுதேவனின் இறுதிச்சடங்கு கூடவே இருந்தார்.

பின்பு என்னிடம் நீங்க ஏன் சிங்கப்பூர் போகிறீர்கள் இங்கேயே இருக்கலாம் நாங்க எல்லாம் இல்லையா என உரிமையுடன் தன்னிடம் இளையராஜா கேட்டதாக மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன் தெரிவித்தார்.