தஞ்சை மாவட்டத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்த நடிகர் கருணாஸ், கல்லூரி கால கட்டத்தில் கனா பாடகராக வலம் வந்தவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் நந்தா படத்தில் அறிமுகம் செய்யப்பட்டு காமெடி நடிகராக பல படங்களில் நடித்து வந்தார், இவர் அதிக படத்தில் நடித்தால் கூட ஒரு காமெடி நடிகர் என்கிற அங்கீகாரம் இவருக்கு கிடைக்கவில்லை , இருந்தாலும் கிடைக்கும் வேடத்தில் நடித்து வந்த கருணாஸ் சினிமாவில் எதிர்பார்த்த அளவு ஜொலிக்கவில்லை.
இந்நிலையில் சசிகலா தயவில் அரசியலுக்கு வந்த கருணாஸ் 2016 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். சட்டமன்ற உறுப்பினரான பின் கை மற்றும் கழுத்தில் தங்க நகைகள், தன்னை சுற்றி ஒரு கூட்டம் என அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்தரியில் குடை பிடிப்பான் என்கிற பழமொழிக்கு ஏற்ப ஓவர் ஆட்டம் போட்டார் கருணாஸ், இதனை தொடர்ந்து ஜெயலலிதா மறைவுக்கு பின் கருணாஸ் ஆட்டம் இன்னும் எல்லை மீறி சென்றது.
ஒரு கட்டத்தில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை பயன்படுத்தி கட்ட பஞ்சாயத்தில் ஈடுபட்டதாக கூறபடுகிறது, இதனை தொடர்ந்து காவல்த்துறை நடவடிக்கையை தொடர்ந்து, போலீசாருக்கு எதிராக ஒரு மேடையில் கருணாஸ் பேசுகையில் தனது கட்சி காரர்களிடம், நீ கொலை கூட பண்ணு. சொல்லிட்டு பண்ணு. அதில் நியாயம் இருக்க வேண்டும் என பகிரங்கமாக பேசினார். உன்னை வாழ விடலையா. தொந்தரவு பண்ணுகிறானா. அப்போ கோபம் வரத்தானே செய்யும்.
சாமி படம், சூர்யா படம், சிங்கம் படத்தையெல்லாம் பார்த்துட்டு டைட்டா சட்டை போட்டுகிட்டு கூலிங்கிளாஸ் போட்டுகிட்டு இரண்டு மூன்று போலீஸ் அதிகாரிங்க இருக்காங்க. அவங்ககிட்ட மேல் அதிகாரிகள் அறிவுரை சொல்லனும். தம்பி இங்க வா நீ வந்து பப்ளிக் சர்வண்ட். மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிற தொழிலாளி. முதல்ல மக்களை மதிக்க கத்துக்கோங்க. ரவுடி பசங்க மாதிரி கூலிங் கிளாஸ் போட்டுகிட்டு பின்னாடி ரவுடி மாதிரி பத்து பேரை வச்சுகிட்டு சுத்துனா மனதில் என்ன ஜமீன்தார் என்று நினைப்பா.. இல்ல குறுநில மன்னர்னு நினைப்பா.
நீ பேட்டில, கத்தியை காட்டி காசு கேக்குறோம்னு சொல்ற. ஒரு நாளைக்கு சரக்குக்கு ஒரு லட்சம் செலவு பண்றோம். வர்றவன் போறவனுக்கு பிரியாணி ஆக்கி போடுதற்கு அவ்வளவு செலவு பண்றோம். டவுசர கழட்டிருப்பேன் அது எங்க பாரம்பரியம். நாங்க சாமிக்கே சாராய பாட்டில் வைத்து சாமி கும்பிடுகிறவங்க. ஐபிஎஸ் படித்த படிப்புக்கே களங்கம் விளைவிக்கக்கூடிய கீழ்த்தரமான ஒரு செயலை செய்தவர் இந்த டிசி அரவிந்த். நான் அன்னைக்கே அவர் டவுசர கழட்டிருப்பேன். அவர் மேல நடவடிக்கை எடுப்பதை வேண்டாம் என்று சொன்னவன்.
நீயா நானான்னு பார்க்கலாம் ஒரு நல்ல அதிகாரி. நேர்மையான அதிகாரி என்று சொல்றாங்க. என்ன ஈகோ. நானா நீயான்னு போட்டு பார்க்கலாம் அப்படிங்கிற மாதிரி பார்க்கிறீங்களா. காக்கிச் சட்டையை கழட்டி வைச்சுட்டு வாங்க பார்ப்போம். நீயா நானான்னு பார்த்துக்கிறேன். அந்த அதிகாரம் தானே உங்களை இப்படி பண்ண வைக்கிறது. அந்த திமிர் தானே உங்களை இப்படி செய்ய வைக்கிறது. வேற மாதிரிதான் செலவு செய்யனும் ஒருத்தர் செய்த தப்பு எவ்வளவு செலவு தெரியுமா இதுக்கு.
உன்னோட மாச சம்பளம் எவ்வளவு. இந்த கூட்டத்துக்கே எனக்கு 10 லட்சம் செலவு. இப்படி ஒவ்வொரு வாட்டியும் 10 லட்சம்னு நான் செலவு செய்ய முடியுமா? அப்ப நான் இந்த 10 லட்சத்த வேற மாதிரி தான் செலவு செய்ய வேண்டும். நாங்கள் தயார் என் தொண்டர்களிடம் அடிச்சுட்டு ஒரு பிரச்சினை ஆச்சுன்னா ஓடி ஒளியாதே என்று சொல்லியிருக்கிறேன். அடிக்கிற தைரியம் இருந்தால் வழக்கையும் ஏற்றுக்கொள்ளணும் என்றுதான் சொல்லி வைத்துள்ளேன்.
இறுதியாக சொல்கிறேன் இது தொடரணும்னு அரவிந்தன் நினைத்தால் அதை சந்திக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் இப்படி ஆணவத்தின் பேசிய கருணாஸ் தற்போது அரசியலில் காணாமல் போனது மட்டுமின்றி, சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல், கடும் பொருளாதார நெருக்கடியில் கை செலவுக்கு கூட கஷ்டப்பட்டு வரும் கருணாஸ் தனக்கு நெருக்கிய சினிமா வட்டாரங்களில் கை மத்தாக பணம் தாருங்கள் அடுத்த படத்தில் ஒப்பந்தம் செய்ததும் திருப்பி தருகிறேன் என் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.