சினிமா துறையில் நடிகர் எம் ஜி ஆர் அளவுக்கு இதுவரை மக்களுக்கு தொண்டு செய்தவர்கள் யாரும் இல்லை என்ற அளவுக்கு ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தவர் எம்ஜிஆர். அதனாலே அவரை தமிழக மக்கள் பொன்மனச் செம்மல் என்று கொண்டாடியவர்கள். மேலும் தன்னை தலைவனாக பார்க்கும் ஏழை எளிய மக்கள் கஷ்டத்தில் நாமும் பங்கு பெற வேண்டும் என்று அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் தன்னை மிக பெரிய உயரத்தில் வைத்துள்ள ஏழை மக்களுக்கு உதவும் வகையில் இருந்தது.
எம் ஜி ஆர் உதவி மனப்பான்மைக்காகவே தமிழக மக்கள் அவரை முதல்வராக கொண்டாடினார்கள். அதன் பின்பு இன்றைய சினிமாவில் நடிகர் ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னனி நடிகர்கள் சுமார் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வந்தாலும் கூட ஆக்க பூர்வாமாக தங்களை தூக்கி வைத்து கொண்டாடும் சமுதாயத்தில் கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற மனம் மிக குறுகிய அளவே உள்ளது.
பல கோடிகளில் சம்பளம் வாங்கும் தமிழ் சினிமா நடிகர்கள் பெரும்பாலும்,ஏழை எளிய மக்களுக்கு நிரந்தரமாக ஒரு தீர்வை தரும் வகையில் எந்த ஒரு உதவியும் இவர்கள் செய்ததாக செய்திகள் வெளியாகவில்லை. நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்களை நேரில் அழைத்து பிரியாணி விருந்து கொடுத்தார். நடிகர் அஜித் தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு வீடு கட்டி கொடுத்தார், பைக்கில் ஊர் சுற்றி வருகிறார்.
நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்தார், என இதுபோன்ற செய்திகள் மட்டுமே வருகிறது, ஆனால் ஆக்கபூர்வமாக ஏழை எளிய மக்களுக்கு நூறு கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் எந்த ஒரு நடிகரும் இதுவரை உதவி செய்ததாக செய்திகள் இல்லை. இந்த நிலையில் கர்நாடகாவில் வியப்பூட்டும் வகையில் சினிமா துறையைச் சேர்ந்த ஒருவரின் செயல் இந்தியா முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
கன்னட திரைப்படங்களான கேஜிஎப் மட்டும் காந்தாரா ஆகிய படங்களை தயாரிப்பாளர் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய ஒரு கல்வி நிலையம் கட்டி எழுப்ப தொடங்கியுள்ளார். மிக வறுமையில் உள்ள ஏழை எளிய மக்களின் குழந்தைகளை, இந்த கல்வி நிலையத்தில்எல்கேஜி முதல் பட்டப் படிப்பு வரை இலவசமாக கல்வியை கொடுத்து அவர்களை அந்த கல்விக்கூடத்தில் இருந்து வெளியேறும் போது ஒரு பட்டதாரியாக வெளியேற்ற வேண்டும், அதற்கான முழு செலவையும் அந்த தயாரிப்பாளர் ஏற்று கொள்ள இருக்கிறார்.
அந்த வகையில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் ஒரு பிரம்மாண்டமான, உலக தரம் வாய்ந்த கல்வியை கொடுக்கும் வகையில், தற்பொழுது அதற்கான வேலைகளை தொடங்கியுள்ளனர் காந்தாரா மற்றும் கேஜிஎப் படத்தின் தயாரிப்பாளர். இவருடை தயாரிப்பில் கே ஜி எஃப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று லாபத்தை கொடுத்தது.
ஆனால் காந்தாரா படத்தின் பட்ஜெட் வெறும் 14 கோடி மட்டுமே இருந்தது. இருந்தாலும் இந்த படத்தின் தயாரிப்பாளர் காந்தார படத்தை வெளியிடும்போது திருப்தி இல்லாமல், எப்படியும் இந்த படத்தில் ஒரு ஏழு கோடி அல்லது 5 கோடி ஆவது குறைந்தது நஷ்டம் அடையும் என்கின்ற மனநிலையில்தான் அந்தப் படத்தை வெளியிட்டுள்ளார். ஆனால் எதிர்பார்த்ததுக்கு மேல் பல கோடி வசூலை அள்ளி குவித்தது காந்தாரா திரைப்படம்.
இதனால் மிகப்பெரிய அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியில் இருந்த காந்தார படத்தின் தயாரிப்பாளர், காந்தாரா படத்தில் வந்த பெரும் லாபத்தில், சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய கல்வி நிலையத்தை கட்டி எழுப்ப தொடங்கியுள்ளார். இந்த நிலையில் கன்னடா சினிமா தயாரிப்பாளர் போன்ற நபர்களை பார்த்து ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.