பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் சமீப காலமாக முன்னனி நடிகர் நடிகைகளை மிக கடுமையாக பேசி வருகிறார். தமிழ் நடிகர்கள் அனைவரும், சம்பள விஷயத்தில் தெலுங்கு நடிகர்களை பார்த்து கற்று கொள்ள வேண்டும் என மேலும், நடிகர் அஜித் நடிப்பில் வெளியான கடைசி இரண்டு படம் தோல்வி, அந்த இரண்டு படமும் ஒரே தயாரிப்பாளர், ஆனால் அவர் சம்பளத்தை பல மடங்கு ஏற்றிவிட்டார் அஜித் மேலும் அதே தயாரிப்பாளருக்கு கால் சீட் கொடுத்து அடுத்த படத்தில் நடிக்கிறார்.
பாவம் ஸ்ரீதேவி புருஷன் போனி கபூர் ரெம்ப கஷ்டப்படுகிறார் போல. ஏன் தமிழ்நாட்டில் தயாரிப்பாளர்கள் இல்லையா என்று பேசிய கே.ராஜன், மேலும் விஜய் நடிப்பில் வெளியான கடைசி படம் தோல்வி ஆனால் அடுத்த படத்தில் 40 கோடி சம்பளத்தை ஏற்றிவிட்டார் விஜய், அதே போன்று நயன்தாரா ஆடியோ நிகழ்ச்சிக்கு வர மாட்டார், ஏண்டி இதுக்காடி ஆறு கோடி சம்பளம் வாங்குகிற, நயன்தாரா சாபம் விட்டால் நான் வயகரா தான் முன்னணி நடிகை நடிகர்களை கடுமையாக பேசியிருந்தார் தயாரிப்பாளர் கே.ராஜன்.
இதற்கு பதிலடி தரும் விதத்தில் பேசியுள்ள பயில்வான் ரங்கநாதன், சம்பள பிரச்சனை இப்போ தான் வந்ததா.? சும்மா தொண்டை கிழிய கத்துகிறார், பல ஆண்டுகளுக்கு முன்பே தயாரிப்பாளர், முக்தா சீனிவாசன், ஏவிஎம் சரவணன், சி டி ராஜேந்திரன் போன்றவர்கள் காலகட்டத்திலேயே, நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குவதாக பிரச்சினை இருந்தது, நடிகர்கள் யாரும் எங்களுக்கு இவ்வளவு சம்பளம் குடுங்க என்று கேட்டதே இல்லை.
நடிகர்கள் கடைசியாக வாங்கிய சம்பளம் எவ்வளவு என்று அடுத்த படத்தை தயாரிக்க இருக்கும் தயாரிப்பாளர்களுக்கு நன்றாக தெரியும். இந்த தயாரிப்பாளரே நடிகரிடம் சென்று போன படத்தில் வாங்கிய சம்பளத்தை விட அதிகமாக தருகிறேன் என்று கால்சீட் வாங்குகிறார். முந்தைய படம் ஹிட்டானால் சம்பளத்தை ஏற்றுவார்கள். அந்த படம் தோல்வி அடைந்தால் நடிகர்கள் சம்பள விஷயத்தில் சற்று அமைதியாக இருந்தாலும், தயாரிப்பாளர்கள் போன படத்தில் வாங்கிய சம்பளத்தை நான் தருகிறேன் என்று நடிகரிடம் கால்சீட் வாங்குவார்கள்.
அதனால் தயாரிப்பாளர்களே நடிகர்கள் சம்பளத்தை அதிகப்படுத்தி அவர்கள் தலையில் அவர்களே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்கிறார்கள். 70% நடிகர்கள் சம்பளமும் மீதம் 30 சதவீதத்தில் தான் படம் எடுக்கிறார்கள் என்று கூறுகிறார். இது இப்போதல்ல பல வருடங்களுக்கு முன்பு பாலும் பழமும் படத்தில் சிவாஜிகணேசன் நடித்த போது அவருக்கு சம்பளம் 7 லட்சம், ஆனால் படம் மொத்தம் எடுக்கப்பட்ட செலவு தொகை வெறும் 4 லட்சம் தான்.
இது அந்தக் காலத்திலும் இருந்தது, விவரம் தெரியாதவன் கத்திக்கொண்டு இருக்கிறான். மக்களே நீங்களாவது விவரத்தை புரிந்துகொள்ளுங்கள், இதுதான் உண்மை. என முக்கிய சினிமா பிரபலம் பயில்வான் ரங்கநாதன் நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குவதாக கே.ராஜன் கடுமையாக பேசியதற்கு தக்க பதிலடி குறிப்பிடத்தக்கது.