நடிகை திரிஷாவின் அரசியல் என்ட்ரி தற்பொழுது தமிழ் சினிமா மட்டுமின்றி தமிழக அரசியல் வட்டாரங்களிலும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திரிஷா மற்றும் நடிகர் விஜய் இருவருக்கும் நெருங்கிய நட்பு உண்டு, அதன் அடிப்படையில் நீண்ட காலமாகவே விஜய் அரசியல் வருகை பலரால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இருந்தும் விஜய் தற்பொழுது சினிமாவில் உச்சத்தில் இருக்கின்ற, இந்த நேரத்தில் அரசியல் என்ட்ரி கொடுத்து சினிமா கேரியரை இழக்க வேண்டாம் என்கின்ற முடிவில், அரசியல் வருகையை கைவிட்டுவிட்டார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் டெல்லி தலைமை நடிகர் விஜயை காங்கிரஸ் கட்சிக்குள் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை நடத்தியது .ஆனால் நடிகர் விஜயின் எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்ததால், காங்கிரஸ் தலைமையினால் அதை பூர்த்தி செய்ய முடியவில்லை என கூறப்பட்டது.
இந்த நிலையில் நடிகர் விஜயின் அறிவுறுத்தலின் பெயரில் கடந்த சில வருடங்களாகவே சினிமாவில் மார்க்கெட் இழந்து, கை வாசம் எந்த படமும் இல்லாத நடிகை திரிஷா அரசியல் என்ட்ரி கொடுப்பதற்கான சரியான தருணம் இதுதான் என்றும், மேலும் திரிஷாவின் அரசியல் வரவேற்பு மக்கள் மத்தியில் எப்படி இருக்கிறது என்பதை பரிசோதனை செய்து, அதற்கு ஏற்றார் போல் அரசியலுக்கு வருவது குறித்து திட்டமிடலாம் என்று முடிவு செய்துள்ளார் விஜய்.
இதனிடைப்படையில் திரிஷாவை காங்கிரஸ் கட்சி பக்கம் தள்ளி விட்டுள்ளார் விஜய். இதனை தொடர்ந்து டெல்லி காங்கிரஸ் தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ள திரிஷா, விரைவில் தமிழக காங்கிரஸ் கட்சியில் முக்கிய பதவி வழங்கப்பட்டு, முழுநேர அரசியல்வாதியாக தமிழகம் முழுவதும் திரிஷா வலம் வருவார் என்கின்ற தகவல் வெளியானது. தமிழக அரசியலில் நடிகர் மற்றும் நடிகைகள் பிரச்சாரம் செய்யும் போது பெருமளவுக்கு மக்கள் கூட்டம் கூடும்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிகாக திரிஷாவை களம் இறக்க டெல்லி தலைமை முடிவு செய்தது, இதனை தொடர்ந்து திரிஷாவுக்கு வழங்கப்படும் பதவி மற்றும் இதர பேரங்களும் பேசி முடிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், விரைவில் காங்கிரஸ் கட்சியில் திரிஷா இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த சுழலில் சினிமா உச்சத்தில் இருந்த நயன்தாராவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்கு பின்பு நயன்தாராவுக்கான புதிய பட வாய்ப்பு குறைந்துள்ளது. இந்த நிலையில் நயன்தாராவின் இடத்தை யார் பிடிப்பது என்பதில் சினிமா நடிகைகள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தில் நடிக்கும் வாய்ப்பை விஜய் கேட்டு பெற்றுள்ளார்.
தற்பொழுது நயன்தாரா இல்லை, அதனால் அந்த இடத்தை நிரப்பும் வாய்ப்பு எனக்கு மட்டும்தான் உள்ளது. அதனால் உங்கள் படத்தில் நீங்கள் வாய்ப்பு கொடுத்து உதவி செய்தால் சினிமாவில் நான் ரீ-என்ட்ரி கொடுத்து ஒரு ரவுண்டு வருவேன் என விஜயிடம் தெரிவித்து இந்த வாய்ப்பை திரிஷா பெற்றுள்ளார். ரீ என்ட்ரி கொடுக்கும் திரிஷாவிற்கு சினிமாவில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து தான் திரிஷாவின் அடுத்த அரசியல் முடிவுகள் அமையும். அதனால் தற்பொழுது தற்காலிகமாக காங்கிரஸ் கட்சியில் இணைவதை தள்ளி வைத்துள்ளார் திரிஷா எனக் கூறப்படுகிறது.