நடிகர் அஜித்குமார் தன்னுடைய வாழ்க்கையை ஒரு மெக்கானிகராக தொடங்கி பின்பு சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி தமிழகத்தில் தனக்கென ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார் அஜித்குமார். இவர் பாலக்காட்டு ஐய்யர் தந்தைக்கும், குஜராத் பெண்ணுக்கும் பிறந்தவர், காதல் கோட்டை படத்தில் தன்னுடன் நடித்த நடிகை ஹீரோவை ஒருதலைபட்சமாக காதலித்து வந்தார் அஜித்.
தன்னுடைய காதலை நடிகை ஹீரோவிடம் தெரிவித்த போது, அஜித் காதலை ஹீரோவின் தாய் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து ஆக்சன் ஹீரோவாக உயர்ந்த நடிகர் அஜித்குமார் அமர்க்களம் படத்தில் நடிகை ஷாலினியுடன் ஜோடியாக நடித்த போது இருவரும் காதல் வயப்பட்டனர். நடிகை ஷாலினி கேரளாவை சேர்ந்த ஒரு கிறிஸ்துவ பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்தவர். குழந்தை நட்சத்திரமாக சிறு வயதிலேயே பல சினிமா படங்களில் நடித்து வந்தவர் ஷாலினி.
ஷாலினியை திருமணம் செய்து கொள்ள அஜித் முடிவெடுத்தபோது ஷாலினியின் தந்தை தற்பொழுது தன் மகள் திருமணம் செய்து கொண்டால், அதன் பின்பு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காது. அதனால் ஒரு பெருந்தொகையை அஜித்திடம் பெற்று தான் ஷாலினியை திருமணம் செய்து கொடுக்க ஒப்புக்கொண்டார் ஷாலினியின் தந்தை என்கின்ற ஒரு தகவலும் சினிமா வட்டாரத்தில், அஜித் – ஷாலினி திருமணம் நடைபெற்ற காலகட்டத்தில் பரவலாக பேசப்பட்டு வந்தது.
கிறிஸ்துவ குடும்பத்தைச் சேர்ந்த நடிகை ஷாலினி, ஐயர் குடும்பத்தைச் சார்ந்த அஜித், இந்து முறைப்படி ஷாலினி கழுத்தில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட அஜித், அதன் பின்பு கிறிஸ்துவ முறைப்படியும் சர்ச் சென்று இருவரும் ஒருவர்க்கொருவர் மோதிரம் மாற்றியும் திருமணம் செய்து கொண்டவர். நடிகர் அஜித் மிக தீவிர கடவுள் நம்பிக்கை கொண்டவர். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு அடிக்கடி சென்று வழிபட்டு வரக்கூடியவர் அஜித்.
அதேபோன்று இந்தியா முழுவதும் உள்ள பழமை வாய்ந்த புகழ்பெற்ற கோவில் திருத்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருகின்றவர் அஜித். தன்னுடைய காதல் மனைவி பிரசவத்திற்கு முன்பும் பிரசவத்திற்குப் பின்பும் திருப்பதி ஏழுமலையானிடம் தன்னுடைய மனைவி ஆரோக்யத்துடன் இருக்க சுவாமி தரிசனம் செய்து வந்தவர் அஜித். அந்த அளவுக்கு தீவிர கடவுள் பக்தி கொண்ட அஜித் எப்பொழுதுமே கோவிலுக்கு தன் மனைவியுடன் செல்லாமல் தனியாகவே சென்று வழிபட்டு வருகின்றார்.
மற்ற பொது நிகழ்ச்சிகளுக்கு மனைவியுடன் செல்லும் அஜித், கோவிலுக்கு மட்டும் தனியாக செல்வதற்கான காரணம் தற்பொழுது வெளியாகியுள்ளது. எம்மதமும் சம்மதம் என அணைத்து மதங்களையும் ஏற்று கொண்டு வாழ கூடியவர் அஜித், அதனால் தான் மனைவி விருப்பத்தை ஏற்று கொண்டு தன்னுடைய திருமணத்தை கிருஸ்துவ முறைப்படியும் செய்து கொண்டார். இந்நிலையில் திருமணம் முடித்த பின்பு மனைவியுடன் கோவிலுக்கு செல்வதற்கு ஆசை பட்ட அஜித் மனைவியை அழைத்துள்ளார்.
ஆனால் அதற்கு மனைவி ஷாலினி என்னுடைய மத சுதந்திரத்தில் நீங்களும் தலையிடக்கூடாது, உங்களுடைய மத சுதந்திரத்தில் நானும் தலையிட மாட்டேன் என்று அன்பு கட்டளையிட்டவர், நான் என்னுடைய மதத்தை மட்டுமே பின்பற்ற விரும்புகிறேன், அதனால் என்னை இந்து கோவில்களுக்கு அழைக்க வேண்டாம், எனக்கு அங்கே வருவதற்கு விருப்பம் இல்லை என திட்டவட்டமாக ஷாலினி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதன் பின்பு மனைவி மத சுதந்திரத்தில் தலையிடுவதை தவிர்த்து வந்த அஜித், எப்போதும் கோவிலுக்கு மனவியில்லாமல் தனியாகவே சென்று வழிபட்டு வருகிறார். இருந்தும் அணைத்து மதத்தை ஏற்று கொண்ட அஜித் மனைவி ஷாலினியும் கணவரை பின்பற்றி அணைத்து மதங்களை ஏற்று கொண்டு அஜித் உடன் கோவிலுக்கு செல்லலாம் என்கிற விமர்சனம் எழுந்தாலும் கூட, மனைவி மத சுதந்திரத்தில் கட்டாயப்படுத்தாமல் அஜித் நடந்து கொள்வது அவருடைய பெருந்தன்மையை காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.