மலையாளத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி ஹிட்டான த்ரிஷ்யம் படத்தை கமல் ஹாசன், கவுதமி நடிப்பில் தமிழில் ரீமேகில் வெளியான படம் பாபநாசம் . இந்த படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் தற்போது மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற த்ரிஷ்யம் 2 படத்தை தமிழில் ரீமேக் செய்து பாபநாசம் 2 என்ற பெயரில் இயக்க தயாராகி வருகிறார். அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் இயக்குனர் இயக்குநர் ஜீத்து ஜோசப்.
பாபநாசம் 2 படத்தில், இதற்கு முன் பாபநாசம் 1 படத்தில் நடித்த அந்த மொத்த யூனிட்டையும் நடிக்க வைக்க இயக்குனர் ஏற்பாடு செய்த நிலையில், பாபநாசம் 1 படத்தில் கமல்ஹாசன் உடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை கௌதமி தற்போது கமல்ஹாசன் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்ட நிலையில், அவர் மீண்டும் கமல்ஹாசன் உடன் ஜோடி சேர்ந்து நடிக்க திட்டவட்டமாக மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து மலையாளத்தில் திரிஷ்யம் படத்தில் நடித்த நடிகை மீனாவை தமிழில் ரீமேக் ஆகும் பாபநாசம் படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இதற்கு நடிகை மீனா அவருடன் ஏற்கனவே நான் ஜோடியாக நடித்த போது நான் பட்ட இன்னல்கள் போதும், அவரை பற்றி எனக்கு நன்கு தெரியும் எத்தனை கோடி கொடுத்தாலும் கமல்ஹாசன் உடன் ஜோடி சேர்ந்து நடிக்க மாட்டேன் என நடிகை மீனா தெரிவித்துவிட்டாராம்.
இதன் பின்பு நடிகை சிம்ரனை தொடர்பு கொண்டு கமல் உடன் ஜோடி சேர பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது பட குழுவினர், ஆனால் நடிகை சிம்ரன் அவரால் நான் ஏமாற்றப்பட்டதை இன்னும் மறக்கவில்லை, என்னுடைய பணத்தை ஏமாற்றியவர், அவரால் நான் பட்ட கஷ்டத்தை மீண்டும் அனுபவிக்க வேண்டுமா.? போதும் சாமி , குடும்பத்துடன் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்த்து வருகிறேன் என தெரிவித்து கமல்ஹாசன் உடன் ஜோடி சேர மறுத்துவிட்டார் சிம்ரன் என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து அமெரிக்காவில் இருக்கும் நடிகை நதியாவை பாபநாசம் 2 படத்தில் கமல்ஹாசன் உடன் ஜோடி சேர்ந்து நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது, அப்போது முதலில் மறுத்த நதியா சற்று சம்பளம் அதிகம் தருவதாக சொன்ன உடன் சில கண்டிஷன் போட்டாராம், எனக்கு கமல்ஹாசன் பற்றி நன்கு தெரியும், அதனால் நான் போடும் கடிசனுக்கு ஒப்பு கொண்டால் படத்தில் நடிப்பது பற்றி யோசித்து சொல்கிறேன் என நதியா தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் நதியா பாபநாசம் 2 படத்தில் நடிப்பது பற்றி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.