பாகுபலியை முறியடித்த வலிமை… அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்…

0
Follow on Google News

தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வலிமை. இந்த திரைப்படத்திற்கான அப்டேட்ஸ் கேட்டு ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், இரு மாதங்களுக்கு முன்பு நடிகர் அஜித் பிறந்தநாளான மே 1 அன்று வெளியாக இருந்தது.

ஆனால் கொரோனா பெரும் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தள்ளி போனது. இதான் பிறகு இந்த படத்திற்கான அப்டேட்ஸ் குறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை. இதனால் வலிமை படத்தின் அப்டேட் ஏதும் வராததால் வருத்தத்தில் இருக்கும் அஜித் ரசிகர்களுக்கு, மிக விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வரும் என கூறப்படுகிறது. ஆனால் இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லா விட்டாலும் ரசிகர்கள் பெருமளவில் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் சினிமா டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்ய பயன்படுத்தப்படும் Book My Show என்ற இணையதளத்தில், அஜித் ரசிகர்கள் பிரம்மாண்ட சாதனை ஒன்றை செய்துள்ளனர். அப்படி என்ன சாதனை? அஜித் நடித்த வலிமை இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே 10 லட்சத்திற்கும் மேலான ரசிகர்கள் அந்த தளத்தில் வலிமை படத்திற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கு முன் இந்த Book My Show இணையதளத்தில் ராஜமௌலி இயக்கத்தில் உருவான பிரமாண்ட திரைப்படமான பாகுபலி 2 தான் உலகளவில் இரண்டாவது இடத்தில் இருந்தது.

ஆனால் இந்த சாதனையை முறியடிக்க பாகுபலி 2 பிறகு வேறு எந்த திரைப்படத்திற்கும் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்ததில்லை. ஆனால் தற்போது பாகுபலி இடத்தை அஜித் ரசிகர்கள் காலி செய்துவிட்டனர். ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர். வலிமை படத்திற்கான அப்படிப் கிடைக்காவிட்டாலும் சமூகவலைத் தளங்களில் தினமும் ஏதாவது ஒன்றை செய்து முதல் இடத்தில் அப்டேட் ஆகும் அஜித் ரசிகர்கள்.