நடிகையும், மாடலிங் துறையைச் சேர்ந்தவருமான மீரா மிதுன், தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிவருகிறார். நடிகர் விஜய், சூர்யா , ரஜினிகாந்த் ஆகியோரை மிக கீழ்த்தரமாக விமர்சனம் செய்து பெரும் சர்ச்சையில் சிக்கியவர். நடிகர் விஜய் மனைவி சங்கீதா விஐய், மற்றும் நடிகர் சூர்யா மனைவி ஜோதிகா ஆகியோரை மிக இழிவாக பேசி கடும் எதிர்ப்பை பெற்றார், ஆனால் மீரா மிதுன் சுய விளமபரத்துக்காக இது போன்று செயல்படுவதாக கூறபடுகிறது.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் தலித் வகுப்பைச் சேர்ந்த இயக்குநர்களைத் தரக்குறைவாகப் பேசி மீரா மிதுன் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், தலித் வகுப்பைச் சேர்ந்தவர்கள் திரைத்துறையை விட்டே வெளியேற வேண்டும் என அவர் பேசினார். மேலும் அவர்கள் சாதி பெயரை குறிப்பிட்டு மிக கீழ்த்தரமாக பேசி இருந்தார் மீரா மிதுன்.இதனை தொடர்ந்து அவர் மீது அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் இன்று வழக்குப் பதிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு நடிகை மீரா மிதுனுக்கு, சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அவரை 12-ந் தேதி விசாரணைக்கு வரும்படி சம்மனில் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில். அதன்படி மீராமிதுன் இன்று கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் சைபர் கிரைம் போலீசார் முன்னிலையில் ஆஜராவார் என்றும், விசாரணை முடிவில் அவர் மீது கைது நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
ஆனால் தனக்கு சம்மன் அனுப்பியது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை மீரா மிதுன், தாராளமாக என்னை கைது செய்யுங்கள். ஏன் காந்தி, நேரு எல்லாம் சிறைக்கு போகவில்லையா..? ஆனால், என்னை கைது செய்வது என்பது நடக்காது ; அப்படி நடந்தால் அது உங்கள் கனவில் தான் நடக்கும்..பட்டியலின மக்களை ஒட்டுமொத்தமாக தவறானவர்கள் என்று சொல்லவில்லை ; எனக்கு தொந்தரவு கொடுத்த அந்த சமூகத்தை சேர்ந்தவர்களைதான் தவறானவர்கள் என்று சொன்னேன்
மேலும், தமிழ்நாட்டில் என்னைப் போன்ற ‘புத்திசாலி’ பெண்களுக்கு பாதுகாப்பில்லை. நீதிமன்ற வழக்குகளை சந்திப்பதற்கு எல்லாம் எனக்கு நேரமில்லை ; ஏனென்றால் நான் அவ்வளவு பிசி. என நடிகை மீரா மீது தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடிகை மீரா மிதுன் இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால், தனிப்படை அமைத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணைக்கு ஆஜர் படுத்த நேரிடும் என வழக்கறிஞர்கள் தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது.