எதுக்கு இந்த விபரீதம்.. விஜய்யை தொடர்ந்து பா.ரஞ்சித்தை புறக்கணித்த விக்ரம்..! பரிதாப நிலையில் பா.ரஞ்சித்… காரணம் என்ன தெரியுமா.?

0
Follow on Google News

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இரண்டு படம் இயக்கிய பா.ரஞ்சித் புதிய படங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்த முன்னணி நடிகர்கள் அந்த படத்தில் இருந்து வெளியரும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தன்னை ஒரு போராளியாக காட்டி கொண்டும், சாதி வன்முறைக்கு எதிரான சீர்த்திருந்த வாதியாக காட்டி கொண்டு பொது தளத்தில் அவர் தெரிவித்த வந்த கருத்துக்கள் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கி பல்வேறு சமூக மக்கள் அவரை வெறுக்கும் அளவுக்கு கொண்டு சென்றுவிட்டது.

சாதி ஒழிப்பு போராளியாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தை ஆண்ட பரம்பரை, நோண்ட பரம்பரை என பொது மேடைகளில் பேசி வம்புக்கு இழுப்பது போன்ற செயல்களால் பா.ரஞ்சித்க்கு எதிரான மனநிலையில் பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் இருப்பது வெளிப்படையாகவே அறிய முடிகிறது, இதற்கு முன் சினிமாவில் சாதியை மட்டுமே தூக்கி பிடித்து, மேலும் தனது சாதி அடையாளத்தை தொடர்ந்து முன்னிலை படுத்தி யாரும் வெற்றி பெற்றதாக சரித்திரம் கிடையாது.

மேலும் பா.ரஞ்சித் தான் இயக்கும் படத்தில் அந்த ஹீரோவை பயன்படுத்தி இவர் வெளிப்படுத்தும் காட்சிகள் அந்த ஹீரோவுக்கு எதிராக பெரும் எதிர்ப்பு வருகிறது, இதில் மெட்ராஸ் படத்தில் நடித்த கார்த்திக் பெரும் சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடதக்கது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை வைத்து, கபாலி, காலா இரண்டு படங்களை இயக்கிய பின் நடிகர் விஜய்யை வைத்து படம் இயக்க விருப்பப்பட்டு கதையை விஜய்யிடம் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் தரப்பில் நடிக்க சம்மதம் தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த படத்துக்கு சூப்பர் ஹீரோ என தலைப்பு வைத்து விஜயை வைத்து படம் இயக்க காத்திருந்த பா.ரஞ்சித்துக்கு ஏமாற்றமே மிஞ்சியது, இவர் படத்தில் நீங்கள் நடித்தால் ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் உங்களை வெறுக்கும் அளவுக்கு அமைந்துவிடும், மேலும் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்த பின்பு தன்னுடைய மார்க்கெட் சரிந்துவிட்டது என ரஜினிகாந்த் வருத்தப்பட்டார் என தனக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து வந்த அறிவுரையை ஏற்றும் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பதை கைவிட்டார் விஜய் என கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய் நடிப்பதாக இருந்த படத்தின் கதையை நடிகர் சியான் விக்ரமிடம் தெரிவித்து சம்மதம் பெற்று விக்ரம் தற்போது நடிக்கும் படங்களை முடித்துவிட்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இதனை தொடர்ந்து இதற்கு இடைப்பட்ட காலத்தில் நட்சத்திரம் நகர்கிறது என்கிற படத்தை இயக்குவதற்கான பணியை தொடங்கினர் பா.ரஞ்சித் இந்த படத்தின் இசை அமைப்பாளர் இளையராஜா இசை அமைக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.

ஆனால் பா.ரஞ்சித் நடவடிக்கை மற்றும் கதையை கேட்ட பின்பு தனக்கென இருக்கும் மாறியதையை தானே இழக்க விரும்பாமல் நட்சத்திரம் நகர்கிறது படத்தில் இசை அமைக்க தனக்கு விருப்பம் இல்லை என இளையராஜா தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம்,கோப்ரா,மகான் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பும் முடியும் தருவாயில் உள்ளது.

இதனை தொடர்ந்து பொன்னியின் செல்வன் பட முடிந்ததும், பா ரஞ்சித் இயக்கும் சூப்பர் ஹீரோ திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தார் விக்ரம், ஆனால் திடீரென கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கனதன் கூறிய கதைக்கு ஓகே சொல்லி உடனே படப்பிடிப்புக்கான வேலையை தொடங்க சொல்லுகிறார் விக்ரம், இப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவிலேயே தொடங்க உள்ள நிலையில் பா.ரஞ்சித் படத்தில் விக்ரம் நடிப்பாரா என சினிமா வட்டாரதத்தில் விசாரித்ததில்.

இசைஞானி இளையராஜா, நடிகர் விஜய் போன்றவர்களே பா ரஞ்சித் உடன் பணியாற்ற தயங்கும் போது உங்களுக்கு ஏன் இந்த விபரீத முடிவு என்றும், உங்கள் மூலம் பிற சமூகத்தின் மீது உள்ள வன்மத்தை வசனமாக காட்சி படுத்த கூடியவர் பா.ரஞ்சித் என தனக்கு நெருக்கமானவர்களின் எச்சரிக்கையை ஏற்று பா.ரஞ்சித் படத்தில் நடிப்பதை தவிர்த்து கோமாளி பட இயக்குனர் படத்தில் நடிக்க விக்ரம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கையில் கதையை வைத்து கொண்டு தான் விருப்பப்படும், ஹீரோ,இசையமைப்பாளர் கிடைக்காமல் பா ரஞ்சித் பரிதவிப்பதாக கூறப்படுவது குறிப்பிடதக்கது.