நடிகர் விஜய் அரசியல் என்ட்ரி தமிழகத்தில் மிக பெரிய பேசும் பொருளாக மாறியுள்ளது. விஜய் அரசியலுக்கு வர இருப்பது, அவருக்கு அரசியல் ரீதியாக கொடுக்கப்பட்டுள்ள நெருக்கடி தான், என்றும், உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி தானே, எனக்கு நெருக்கடி தருகிறீர்கள், அதே அதிகாரத்துக்கு நான் வந்துவிட்டால், என்கிற அடிபட்டு நொந்து நூலாகி ஒருத்தன் வருவான் என விஜய் இதற்க்கு முன்பு அவரே பேசியது போல.
அரசியல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து, அடிபட்டு, நொந்து, நூலாகி இப்ப அரசியலுக்கு வர இருக்கிறார் விஜய். கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஜய் அதிகம் சீண்டியது மத்திய பாஜகவை தான், தன்னுடைய திரைப்படங்கள் வாயிலாக மத்திய பாஜக அரசுக்கு எதிராக வசனம் பேசிவிட்டு தன்னுடைய ரசிகர்களை உசுப்பேத்தி விட்டு, பாஜகவினரை கடுப்பேத்தி விட்டு அவர் உம்முனு அடுத்த பட ஷூட்டிங் சென்று விடுவார்.
ஆனால், விஜய் ரசிகர்களுக்கும் பாஜகவினருக்கும் இடையிலான கருத்து மோதல் பரபரப்பை ஏற்படுத்தும், இப்படி தொடர்ந்து மத்திய பாஜக அரசை சீண்டி வந்த நடிகர் விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது,, அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை, மற்றும், நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை தட்டி தூக்கி, வருமான வரித்துறை அதிகாரியின் காரில் அழைத்து வந்த விதம் என விஜய்க்கு நடந்த இந்த சம்பவத்திற்கு பின்பு மத்திய பாஜக அரசை சீண்டுவதை கைவிட்டு விட்டார் விஜய்.
அந்த விதத்தில் வருமான வரித்துறை சோதனையில் என்ன நடந்தது,? ஏன் விஜய் இந்த சம்பத்திற்கு பின்பு கப் சீப் ஆனார் என்பது மர்மமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் நடந்து முடிந்த கடந்த சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய் தனது வீட்டில் இருந்து வாக்களிக்க நீலாங்கரை வரை சைக்கிளில் சென்று வாக்களித்தார். இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துள்ளதை சுட்டி காட்டும் வகையில் அவர் சைக்களில் சென்று வாக்களித்தார் என்றும். இது பாஜகவுக்கு எதிரான குறியீடு என கூறப்பட்டது.
மேலும், விஜய் ஓட்டி வந்த சைக்கிள் கருப்பு, சிவப்பு நிறம் கொண்டதாக இருந்ததால், விஜய் திமுகவுக்கு ஓட்டு போட்டு அவரது ஆதரவை திமுகவுக்கு தெரிவித்துள்ளார் என ஒரு பக்கம் பரபப்பாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் விஜய்யின் அரசியல் என்ட்ரி என்பது யாரை எதிர்த்து அரசியல் செய்ய போகிறார், மத்திய பாஜகவையா.? அல்லது ஆளும் திமுக அரசையா.? என்கிற கேள்விக்கு அவரே பதிலளிக்கும் வகையில் பேசியுள்ளார்.
சமீபத்தில் நடந்த மாணவர் சந்திப்பு நிகழ்வில் பேசிய நடிகர் விஜய் பேசுகையில், ஆனால் பாருங்கள் நம்ம விரலை வைத்து நம் கண்ணை நாமே குத்துவது போன்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா.? அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அதைத்தான் நாம் செய்து கொண்டிருக்கிறோம். அது தாங்க, காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போடுவது, ஒரு வாக்குக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள்.
தொகுதிக்கு சுமார் ஒன்ற ரை லட்சம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள் என்றால், ஒரு தொகுதிக்கு 15 கோடி ரூபாய் வரை செலவாகும், அப்படியானால் ஒருவர் 15 கோடி ரூபாய் ஒரு தொகுதிக்கு செலவு செய்கிறார் என்றால், அதற்கு முன்பு அவர் எவ்வளவு சம்பாதித்து இருக்க வேண்டும் என நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். இதெல்லாம் மாணவர்களுக்கு நான் கற்றுக் கொடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் அவரவர் பெற்றோர்களிடம் இனி பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்க வேண்டாம் என தெரிவிக்க வேண்டும். முயற்சி செய்யுங்கள், நிச்சயம் உங்களால் இது நடக்கும் என விஜய் பேசியது மறைமுகமாக ஆளும் திமுக அரசுக்கு எதிராக தனது அரசியலை முன்னெடுத்து செல்வார் என்பதை தெளிவு படுத்தியுள்ளது, சைக்கிளில் குறியீடுகளுடன் வாக்கு போட்ட விஜய், அதன் பின்பு ஆட்சிக்கு வந்த ஆளும் தரப்பினரால், ரெம்ப பாதிக்கப்பட்டிருப்பார் போல பாவம், அதனால தான் மேடையில் தனது வேதனையை மாணவர்கள் மத்தியில் கொட்டி தீர்த்துள்ளார் விஜய் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.