நடிகர் விஜய்யின் இன்றைய சினிமா வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்க கூடியவர்கள் அவருடைய தாய் மற்றும் தந்தை தான் என்பதை மறுக்க முடியாது, விஜய் தாய் , தந்தை இருவருமே சினிமா துறையை சேர்ந்தவர்கள், தன்னுடைய இயக்கத்தில் மகன் விஜய்யை குழந்தை நட்சதிரமாக சினிமாவில் அறிமுகம் செய்த SA சந்திரசேகர், 1992ல் அவருடைய இயக்கத்தில் நாளைய தீர்ப்பு படத்தில் ஹீரோவாக மகனை அறிமுகப்படுத்தினார்.
விஜய் நடிப்பில் ஆரம்பத்தில் வெளியான படங்களுக்கு வரவேற்பு இல்லை என்றாலும் கூட, மகன் நடிகராக வேண்டும் என்று விரும்புவதால், மகனின் ஆசையை நிறைவேற்ற தொடர்ந்து தன்னுடைய சொந்த இயக்கத்தில் மீண்டும் மீண்டும் மகனை ஹீரோவாக நடிக்க வைத்து படம் இயக்கினார் SA சந்திரசேகர். அதே காள கட்டத்தில் சினிமாவில் என்ட்ரி கொடுத்த அஜித் யாருடைய உதவியும் இல்லாமல் தனி ஒருவனாக போராடி பட வாய்ப்புகளை பெற்று நடித்து கொட்டிருந்தார்.
ஆனால் விஜய் அப்படி போராடாமல் எளிதாக தந்தை முதுகில் சவாரி செய்து ஒரு கட்டத்தில் உச்ச நடிகர்கள் வரிசையில் இடம் பிடித்தார். இந்த நிலையில் தாய் , தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில வருடங்களாக தாய் மற்றும் தந்தையுடன் விஜய் பேசுவது கூட கிடையாது என்று கூறப்படுகிறது. விஜய் மக்கள் மன்றம் தொடர்பாக விஜய் மற்றும் SA சந்திரசேகர் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை நீதிமன்றம் வரை சென்றது குறிப்பிடதக்கது.
தாய், தந்தை இருவரையும் கண்டுகொள்ளாத விஜய், கடந்த சில மாதங்களுக்கு முன்பு SA சந்திரசேகர் 80வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. இதில் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி, குழந்தைகள் யாருமே கலந்து கொள்ளவில்லை, அதே போன்று கடைசியாக நடந்த விஜய் பிறந்தநாள் அன்றும் அவருடைய தந்தை, தாய் யாரையும் நேரில் சந்தித்து விஜய் ஆசிர்வாதம் வாங்கவில்லை.
இப்படி தொடர்ந்து தன்னை பெற்று, வளர்த்து ஏணியாக இருந்து மிக பெரிய உயரத்திற்கு ஏற்றி விட்ட தாய் தந்தையிடம் முரண்பாடுடன் இருக்கும் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் வாரிசு படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா சமீபத்தில் நடந்தது, இந்த நிகழ்ச்சியில் விஜய்யின் தாய் மற்றும் தந்தை கலந்து கொண்டனர். அதில் விஜய் அவருடைய தாயிடம் நடந்து கொண்ட விதம், பார்ப்பவர்களை கண் கலங்க வைத்துள்ளது.
அடியோ நிகழ்ச்சியில் முன் வரிசையில் அமர்ந்து இருந்த முக்கியஸ்த்தர்கள் அனைவர்க்கும் வணக்கம் வைத்துக்கொண்டே வருகிறார் விஜய், அவர்கள் அனைவரும் எழுந்த நின்று விஜய்க்கு வணக்கம் வைக்கிறார்கள், அவர்களுடன் பத்தோடு பதினொன்றாக விஜய் தாய் விஜய்யை பார்த்து வணக்கம் வைக்கிறார், ஆனால் விஜய் தன்னுடைய தாயையும் பத்தோடு பதினொன்றாக கூட்டத்தோடு கூட்டமாக வணக்கம் வைத்து விட்டு கடந்து செல்கிறார்.
ஆனால் விஜய் தன் அருகில் வரும் பொழுது, தன்னுடைய மகன் தன்னிடம் ஒரு வார்த்தை பேசுவாரா என்கிற ஏக்கம் தாய் சோபா கண்ணில் தெரிகிறது, ஆனால் மகன் தன்னை கூட்டத்தில் ஒருவர் போன்று வணக்கம் வைத்து கடந்து செல்லும் போது அந்த தாய் முகம் வாடியதை பார்ப்பவர்கள் கண் கலங்க வைத்து விடுகிறது இந்த சம்பவம். இந்நிலையில் ஆயிரம் தான் இருந்தாலும் வயதான தாய், தந்தையை இப்படி தவிக்க விடும் அளவுக்கு இரக்கமற்றவராக இருப்பது கடும் விமர்சனம் எழுந்துள்ள கூறிப்பிடத்தக்கது.