நடிகர் அஜித்குமார் நடித்த ‘தீனா’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஏ.ஆர்.முருகதாஸ், அவர் இயக்கத்தில் வெளியான முதல் படமே மிக பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து, முன்னனி இயக்குனர் பட்டியலில் இடம் பிடித்தர், இதன் பின்பு விஜயகாந்த் நடித்த ரமணா, சூர்யா நடித்த கஜினி ஆகிய படங்கள் மூலம் வெற்றி இயங்குநரனர். கஜினி படத்தை இந்தியில் இயக்கி அங்கேயும் வெற்றி கொடி நாட்டினர், இதனை தொடர்ந்து விஜய் உடன் கூட்டணி சேர்ந்தவர் துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய படங்களை இயக்கி வெற்றியை கொடுத்தார்.
இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய போது, அவரை நேரில் அழைத்த விஜய் மீண்டும் நம்ம ஒரு படம் பண்ணலாம் தர்பார் படத்தை முடித்துவிட்டு கதையை ரெடி பண்ணுக என விஜய் தெரிவித்துள்ளார், இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் 65வது படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் 4-வது படம் இது என்பதால் சினிமா ரசிகர்கள் மத்தியில் இந்த செய்தி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நடிகர் விஜய்க்காக கதை ஏற்பாடும் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த ஏ.ஆர்.முருகதாஸ், துப்பாக்கி படம் போன்று விறு விறுப்பான கதையை ரெடி செய்தார், இதன் பின்பு விஜயை நேரில் சந்தித்து கதையை தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ், கதையை கேட்ட விஜய் சூப்பர் சார், அருமையாக இருக்கு என பாராட்டியவர் விரைவில் அடுத்தகட்ட பணியை தொடங்கி விடுவோம் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சன் பிக்சர் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ்- விஜய் கூட்டணியில் தளபதி 65 படம் விரைவில் படபிபிடிப்பு தொடங்கு என எதிர்பார்த்த நிலையில்.சன் பிக்சர்ஸ் நிறுவனம்தயாரிப்பில் விஜய் நடிப்பில் ‘தளபதி 65’. திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் படப்பிடிப்பு தொடக்கியது, இதில் விஜய்க்கு நாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார், ஜார்ஜியாவில் முதற்கட்டப் படப்பிடிப்பு மட்டுமே முடிந்துள்ளது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்புக்காக சென்னையில் அரங்குகள் அமைக்கப்பட்டு வந்தன. அப்போதுதான் கரோனா 2-வது அலையின் தீவிரத்தால் அனைத்துப் பணிகளும் நிறுத்தப்பட்டன
இந்நிலையில் கதையை தயார் செய்ய சொல்லிவிட்டு கதையை கேட்டுவிட்டு, காத்திருந்த தன்னை கடைசி நேரத்தில் கழட்டி விட்ட விஜய் மீது கடும் கோபத்தில் இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ், இவர் இல்லை என்றால் வேறு நடிகரே இல்லையா.? அதே கதையில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைத்து, அந்த படத்தை மெஹா ஹிட் கொடுத்து, இந்த படத்தில் நடிக்காமல் போனது குறித்து விஜய் வருந்தும் நிலையை உருவாக்குவேன் என ஏ.ஆர்.முருகதாஸ் சவால் விடுத்துள்ளதாக கூறபடுகிறது.