குறைந்த வரி வசூல் செய்யும் சிங்கப்பூரில் இலவச மருத்துவம், ஆனால் அதிக வசூல் செய்யும் இந்தியாவில் இலவச மருத்துவம் இல்லை. என்று உண்மைக தன்மை இல்லாமல் திரைப்படத்தில் வீர வசனம் பேசும் விஜய், தனது ரசிகர்களை உசுப்பேத்திவிட்டு உம்முனும், சிலரை கடுப்பேத்திவிட்டு கம்முனும் அவர் ஜம்முனு இருப்பர். ஆனால் அவர் கடுப்பேத்தி விட்டவர்களிடம் சிக்கி சின்னாபின்னமாவார்கள் அவர் உசுப்பேத்திவிட்ட அவருடைய ரசிகர்கள்.
இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்து கடந்த 2012ல் இறக்குமதி செய்த விலை உயர்ந்த சொகுசு ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் நடிகர் விஜய். இதை விசாரித்த நீதிமன்றம் விஜயின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்ததுடன், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார். மேலும் நீதிமன்றம் தீர்ப்பில், ‛சமூக நீதிக்காக பாடுபடுவதாக கூறிக்கொள்ளும் நடிகர்கள் வரி விலக்கு கோருவதை ஏற்க முடியாது.
சினிமா நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். நிஜ வாழ்வில் ரீல் ஹீரோக்களாக இருக்கக்கூடாது. வரி செலுத்துவது என்பது நன்கொடை கொடுப்பது போன்றது அல்ல, குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாய பங்களிப்பு.’ என நீதிமன்றம் நடிகர் விஜய்க்கு சாட்டையடி கொடுத்தது. இந்த விவகாரம் நடிகர் விஜய்க்கு கடும் அவமானத்தை பெற்று தந்தது. இதனால் சமூக ஊடகத்தில் வரி காட்டுங்க விஜய் என ஹாஸ்டக் ட்ரெண்டானது.
இந்நிலையில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களிக்க நடிகர் விஜய் தனது வீட்டில் இருந்து நீலாங்கரை வரை சைக்கிளில் சென்று வாக்களித்தார். விஜய் சைக்களில் சென்று வாக்களித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துள்ளதை காட்டும் வகையில் அவர் சைக்களில் சென்று வாக்களித்தார் என்று பலர் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் அவர் திரும்பி செலும்போது பைக்கிள் லிஃப்ட் கேட்டு சென்றார்.
இந்நிலையில் வரி கட்ட முடியாத விலை உயர்ந்த தனது சொகுசு காருக்கு பெட்ரோல் போட முடியாமல் தான் வாக்களிக்க நடிகர் விஜய் சைக்கிளில் வந்தாரா.? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி கிண்டல் செய்து வருகின்றனர். மேலும் நீதிமன்ற தீர்ப்பு குறித்து வாய் திறக்காமல் உம்முனு சும்மா. ஜம்முனு இருக்கும் நடிகர் விஜய் அடுத்து அவருடைய படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் என்ன பன்ச் வசனம் பேசுவார் என்று தற்போதே விவாத பொருளாக மாறியுள்ளது.