பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதியை பயணி ஒருவர் தாக்க முயன்ற வீடியோ சமீபத்தில் இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது, கர்நாடகா மாநிலம் பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதியின் மீது ஓடிவந்து ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். பின்னர், விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு படை வீரர்கள் தாக்குதல் நடத்த முயன்றவரை தடுத்து நிறுத்தினர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் நடிகர் விஜய் சேதுபதி எதர்க்காக தாக்கப்பட்டார் என்பது குறித்து முழு விவரம் வெளியாகமல் இருந்த நிலையில், விமான நிலையத்தில் விஜய்சேதுபதி மீது தாக்குதல் நடத்தியவர் எதற்காக தாக்குதல் நடந்தது என்பது குறித்து பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியதாவது, நானும் விஜய் சேதுபதியும் ஒரே விமானத்தில் பயணிக்கின்றோம் என்பது விமானத்தை விட்டு இறங்கிய பின்பு தான் எனக்கு தெரியும்.
விஜய் சேதுபதி எனக்கு முன்பே தெரியும், நான் ஒரு தேசியவாதி, தேசப் பற்றாளன் என்பதால் தேசிய விருது வாங்கிய விஜய் சேதுபதிக்கு வாழ்த்து சொல்லலாம் என அவர் அருகில் சென்றேன். அவருக்கு தேசிய விருது வாங்கியதற்கு வாழ்த்தும் சொன்னேன். அதற்கு அவர் இது தேசமா.? எனக்கேட்டார். மேலும் தேவர் குருபூஜைக்கு வந்தீங்களா என கேட்டேன்.
அதற்கு குரு என்றால் யார்.? என கேட்டார். மேலும் நீ சொல்லுகின்ற நபர் jewish carpenter ( யூத தச்சன்). நீ சொல்ற ஆளுடா அப்படின்னு சொல்லிட்டு சென்றார், மேலும் ஆபாசமாகவும் பேசி விட்டு சென்றார். மன வலிமையுடன் வெளியில் வந்தேன். பின்பு எனது லக்கேஜை எடுக்க நான் காத்திருந்தபோது, விஜய்சேதுபதியுடன் வந்திருந்த பாஸ்டர் ஜான்சன் என்பவர் உட்பட சுமார் மூன்று நபர்கள் என்னை தாக்கினார்கள்.
இது விமானநிலையத்தில் உள்ள CCTVயை ஆய்வு செய்தால் தெரியும், பலர் விஜய்சேதுபதியை கேரளா காரர் அடித்துவிட்டார், கர்நாடகா அடித்துவிட்டார், என்று சொல்கிறார்கள் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. தமிழன் என் பெயர் மகா காந்தி நான் தான் தாக்கினேன் என்னை அடித்ததால் திரும்பி தாக்கினேன், நான் வெளியில் சொல்வது 10% தான் ஆனால் இன்னும் 90 சதவீதம் உள்ளது. என் மீது தவறு இருந்தால் நான் வணங்கும் தேவர் ஐயா என்னை தண்டிப்பார், விஜய்சேதுபதி மீது தவறு இருந்தால் மேலே இருப்பவர் பார்த்து கொள்வர் என விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்தியவர் பேசிய வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.