நடிகர் சிலம்பரசன் சிறு வயதிலே குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர், இவர் கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போதே நடிகர் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா உடன் காதல் கிசு கிசுவில் சிக்கினார், நீண்ட வருடமாக இவர்கள் காதல் விவகாரம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இதனை தொடர்ந்து காதல் அழிவதில்லை என்கிற திரைப்படம் மூலம் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியில் கதநாயனாக அறிமுகமானார் சிம்பு.
இந்நிலையில் சிம்பு உடன் அலை படத்தில் ஜோடியாக நடித்த த்ரிஷா உடன் நெருக்கமான சிம்பு அடிக்கடி இருவரும் சுற்றுலா செல்ல தொடங்கினர். இந்த விவகாரம் காதலி ஐஸ்வர்யா கவனத்துக்கு சென்றதும், இருவருக்குமான காதல் முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது, இதன் பின்னர் தொடர்ந்து என்னுடைய சிறந்த தோழி திரிஷா என வெளிப்படையாக தெரிவித்து வந்த சிம்பு தொடர்ந்து பொது இடங்களில் திரிஷா உடன் சுற்றி வந்தார்.
இதன் பின்பு வல்லவன் படத்தில் தன்னுடன் நடித்த நடிகை நயன்தாராவை காதலித்தார் சிம்பு, ஆனால் இந்த காதல் குறுகிய காலத்தில் முடிவுக்கு வந்தது, ஆனால் இவர்கள் காதலை இணைந்து வைக்க சிலர் முயற்சித்தும், சிம்பு தன்னை ஏமாற்றிவிட்டார், எனது பாவம் அவரை சும்மா விட்டது, விரைவில் அவர் சினிமாவில் அட்ரஸ் இல்லாமல் போய் விடுவார் என சாபம் விட்ட நயன்தாரா, இறுதி வரை சமரசம் அடையவில்லை.
ஆனால் காதலில் தோல்வி அடைந்தாலும் தொடர்ந்து தோழி திரிஷா உடன் நட்பில் இருந்து வந்தார் சிம்பு. இந்நிலையில் நயன்தாரா காதல் பிரிவுக்கு பின், அவர் விடுத்த சாபம், என்னோமோ தெரியவில்லை தொடர்ந்து சிம்பு நடித்த படம் தோல்வியை தழுவியது, மேலும் அடுத்தடுத்து அவர் நடிப்பில் படம் ஏதும் வெளியாகவில்லை, இந்நிலையில் வாலு படத்தில் நடிக்கும் போது ஹன்சிகாவை காதலித்த சிம்பு. இந்த காதல் சில மாதங்கள் கூட நீடிக்கவில்லை முடிவுக்கு வந்தது.
இதனை தொடர்ந்து இது நம்ம ஆளு படத்தில் நடிக்கும் போது நடிகை ஆண்ட்ரியா உடன் கிசு கிசுவில் சிக்கினார். அடுத்த சில நாட்களில் ஆண்ட்ரியா – சிம்பு இருவரின் கிசு கிசு அடங்கியது. ஆனால் தொடர்ந்து தற்போது வரை நடிகை திரிஷா உடன் மட்டும் நல்ல நட்புடன் இருந்து வரும் சிம்பு அவ்வப்போது இரவு பார்ட்டி, மற்றும் பொது இடங்களில் திரிஷா உடன் ஜோடியாக உலா வருவது குறிப்பிடதக்கது.