தமிழ் சினிமா துறையினரால்,தமிழ் சினிமாவை காக்க வந்த கடவுள் எனப் போற்றப்படும் பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் தற்பொழுது வருமான வரி துறையின் கையில் சிக்கியுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அன்புச் செழியனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனையில் டைரி உட்பட பல முக்கிய ஆவணங்கள் சிக்கியது,
அதன் அடிப்படையில் நடந்த விசாரணையில் குறிப்பிட்ட காலத்துக்குள் முறையாக பதில் அளிக்க வேண்டும் என கால அவகாசம் கொடுத்தது வருமான வரித்துறை. ஆனால் குறிப்பிட்ட காலத்துக்குள் முறையான பதிலளிக்காத காரணத்தினால் தற்பொழுது மீண்டும் அன்பு செழியன் உட்பட அவருடன் தொடர்பில் இருந்த பல தயாரிப்பாளர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
பெரும்பாலும் சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் படம் தயாரிக்கும் நடிகர்கள் அனைவரும் கையில் இருந்து அவர்கள் பணத்தை போட்டு படம் எடுக்க மாட்டார்கள். கடன் வாங்கி தான் படம் தயாரிப்பார்கள், இதற்கு காரணம் தங்கள் கையில் இருக்கும் பணத்தை வைத்து படம் எடுத்தால் ரிஸ்க் ஆகிவிடும் என்பதாலும். கடன் வாங்கி படம் தயாரித்தால் படம் சரிவர போகவில்லை என்றால் கூட வட்டியில் சில தொகையை குறைக்கலாம்.
அல்லது அதே பைனான்சியரிடம் மீண்டும் கடன் பெற்று, மேலும் ஒரு படம் எடுத்து, அது வெற்றி படமாக அமைந்து அதில் வரும் லாபத் தொகையில் கடனை கட்டிவிடலாம். இதே தனது சொந்த பணத்தை போட்டு படம் எடுத்தால், இதுவரை சம்பாதித்து வைத்த தொகையை இழக்க நேரிடும். அதனால் தான் நடிகர் சூர்யா உட்பட பல முன்னணி நடிகர்கள் கூட தங்கள் கையில் இருந்து பணத்தை போட்டு படம் எடுப்பதில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜெண்ட் சரவணன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் லெஜெண்ட். இந்த படம் சுமார் 30 கோடி பட்ஜெட்டில் வெளியானது, சினிமா வட்டாரத்தில் லெஜென் சரவணன் கடன் வாங்கித் தான் லெஜன்ட் படத்தை தயாரித்தார் என்கின்ற பேச்சும் அடிபட்டு வந்தது. இது குறித்து சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில்.
லெஜெண்ட் சரவணன் கையில் இருந்து மிகப்பெரிய தொகையை போட்டு படம் எடுத்தால் வருமான வரி துறையிடம் கணக்கு காட்டுவதில் சிக்கலாகிவிடும் என்பதால். அன்புசெழியனிடம் கடன் வாங்கி லெஜன்ட் படத்தை தயாரித்ததற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது. இது அவரிடம் பணம் இல்லை என்பதற்காக அல்ல, வருமானவரித்துறையிடம் கடன் வாங்கினேன் என்று கணக்கு காட்டுவதற்காகத்தான், அவர் அன்புச் செடியுடன் கடன் வாங்கி லெஜெண்ட் படத்தை தயாரித்திருப்பார் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.