ஒரே வீட்டில் ஜெய்-அஞ்சலி….மது போதையில் ஜெய் அட்டூழியம் ..காதல் முறிவுக்கு என்ன காரணம் தெரியுமா.?

0

‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் நடித்த ஜெய்க்கும், அஞ்சலிக்கும் இடையே காதல் கிசு கிசுக்க பட்டது. இருவரும் ஒன்றாக சேர்ந்து வெளியே சுற்றி வந்த நிலையில், அஞ்சலி பிறந்த நாளின் போது ’எனக்கு நீ எவ்வாறு ஸ்பெஷலாக இருக்கிறாயோ, அதே போன்ற நாளாக இன்றைய நாள் அமையட்டும். நீ நீயாக இருந்து என் நாட்களை சிறப்பானதாக மாற்றுகிறாய். கடவுளும் நானும் எப்போதும் உன்னுடன் இருப்போம். ஹேப்பி பர்த் டே அஞ்சு’ என்று செல்லமாக காதல் மொழியில் நடிகர் ஜெய் வாழ்த்துத் தெரிவித்து தனது காதலை உறுதி செய்தார்.

இந்நிலையில் நடிகர் ஜெய் நடிக்கும் படங்களில் தனக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடிக்க வைக்க வேண்டும் என அடம்பிடித்து சில படங்களில் அவரே இயக்குனரிடம் தெரிவித்து ஒப்பந்தம் செய்துள்ளார்.இடையில் இவர்களின் காதலில் சில விரிசல் வந்தாலும் மீண்டும் ‘பலூன்’ படம் மூலம் ஜெய்யும், அஞ்சலியும் இணைந்தார்கள். அப்படத்தின் படப்பிடிப்பின் போது ஜெய் மற்றும் அஞ்சலிக்கு நட்சத்திர ஓட்டலில் தனி தனி அறை போடப்பட்டும் இருவரும் ஒரே ரூமிலேயே தங்கிக் கொண்டதாக கூட செய்திகள் வெளியானது.

இதற்கிடையில் ஜெய் மற்றும் வாணிபூஜன் இருவரும் இணைந்து நடித்துள்ள ட்ரிபிள் வெப் சீரியல் ஜெய் மற்றும் வாணி போஜன் மிகவும் நெருக்கமாக நடித்து இருந்தார்கள். வாணி போஜன் ஏற்கனவே திருமணமானவர் என்றாலும் இந்த வெப் சிரியலில் நடித்த பின்பு இவர்கள் இருவருக்கும் நெருக்கம் அதிகமாகி விட்டதாக தகவல் வெளியானது.இதனை தொடர்ந்து நடிகை அஞ்சலிக்கு காதலன் ஜெய் மீது கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின் இருவரும் பேசி சரி செய்து கொண்டதாக கூறபடுகிறது.

இந்நிலையில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் குடும்பத்துடன் குடியிருக்கும் நடிகை ஜெய், அதே அடுக்கு மாடி குடியிருப்பில் தனது காதலி அஞ்சலிக்கு ஒரு வீடு வாங்கி தந்துள்ளதாக கூறபடுகிறது. இருவரும் ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஜெய் மது போதைக்கு அடிமையாகி அதிகமாக மது அருத்தி வந்துள்ளார், இது அஞ்சலிக்கு பிடிக்கவில்லை, அஞ்சலி எவ்வளவோ பேசியும் ஜெய் திருந்துவதாக இல்லையாம்.

இந்நிலையில் இருவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது, தொடர்ந்து இருவருக்கு இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை தொட்டதை தொடர்ந்து ஒருகட்டத்தில் நடிகை அஞ்சலி காதலை முறித்து கொண்டு, நடிகர் ஜெய் வாங்கி தந்த வீட்டில் இருந்து வெளியேறியதாக சினிமா பிரபலம் ஒருவர் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து ஜெய் – அஞ்சலி காதல் ஜோடிகள் இனி மீண்டும் இணைவதற்கு வாய்ப்புகள் குறைவு என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here