அஜித் பட பாதியில் வெளியேறிய ஹெச்.வினோத்… பின்னணியில் விஜய் சேதுபதி… என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வலிமை, இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. வலிமை படத்தின் இயக்குனர் எச் வினோத் ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் வினோத்திற்கு ஒரு வாய்ப்பை கொடுத்தார் அஜித். ஆனால் நீண்ட தாமதத்திற்கு பின்பு வெளியான வலிமை படம் ரசிகரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

இதனால் இரண்டு வருடம் காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில் வலிமை படத்தின் தயாரிப்பாளருக்கு உதவி செய்யும் வகையில் மீண்டும் அதே தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் ஒரு படம் நடித்து கொடுக்க கால் சீட் கொடுத்தார் அஜித். இந்த படத்தை இதற்கு முன்பு வலிமை படத்தை இயக்கிய ஹெச்.வினோத் இயக்குகிறார்.

இந்நிலையில் அஜித் நடிக்கும் AK 61 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்காமல் காலதாமதமாகி கொண்டு இருக்கிறது. இதற்கு காரணம் சமீபத்தில் நடந்த சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் நடந்த ஐடி வீடு தான் என கூறப்படுகிறது. அஜித் நடிக்கும் AK 61 படத்திற்கு பைனான்ஸ் செய்வது அன்புச் செழியன்.

சமீபத்தில் நடந்த ஐடி ரெய்டு காரணமாக அன்புச் செழியன் கடும் சிக்கலில் சிக்கியுள்ளார். இதனால் AK 61 படத்திற்கு பைனான்ஸ் செய்ய முடியவில்லை. இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடர்வதில் சிக்கல் ஏற்பட்ட தாமதமாகிக் கொண்டிருக்கிறது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்னும் தொடங்காத நிலையில் அஜித் பைக்கில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஆனால் எச் வினோத் நேரம் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்பதற்காக, இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்து விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் ஏற்கனவே கமிட்டாகி இருந்த நிலையில், அதனால விஜய்சேதுபதியை சந்தித்து, தற்பொழுது அஜித் நடிக்கும் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தாமதம் ஆகிறது, அதனால் உங்களுடன் கமிட்டாகியுள்ள படத்தை தொடங்கலாம் என தெரிவித்துள்ளார்.

ஆனால் அதற்கு விஜய் சேதுபதி இது தவறு, அஜித் நடிக்கும் படத்தை முடித்துவிட்டு புதியதாக நாம் கமிட்டாகி இருந்த படத்தை தொடங்கலாம். பாதியிலே ஒரு படத்தை முடிக்காமல் விட்டு வந்தால், அது அந்தப் படத்திற்கு மிகப்பெரிய நெகட்டிவ் ஆக அமைந்துவிடும் என விஜய் சேதுபதி அறிவுறுத்தியதை தொடர்ந்து, அஜித் நடிக்கும் புதிய டத்தை முடித்துவிட்டு விஜய் சேதுபதி அடுத்த படத்தை தொடங்கலாம் என ஹச்.வினோத் இருப்பதாக கூறப்படுகிறது