ஆண்டியால் அத்தனையும் இழந்த நடிகர் கரன் இன்றைய நிலமை என்ன.? யார் அந்த ஆண்டி தெரியுமா.?

0
Follow on Google News

1967ம் ஆண்டு பிறந்த நடிகர் கரண் தனது 5 வயதில் குழந்தை நட்சத்திரமாக மலையாள படம் ஒன்றில் அறிமுகமானார், இதனை தொடர்ந்து தனது 5 வயதில் இருந்து 15 வயது வரை சுமார் 44 படங்கள் குழந்தை நட்சத்திரமாக நடித்த கரண் அதில் ஒரு படம் தமிழ் மொழியிலும் மற்ற அணைத்து படங்களும் மலையாள மொழியில் நடித்திருந்தார், பின் படிப்பில் கவனம் செலுத்த தொடங்கிய கரண் கல்லூரி படிப்பை முடித்து மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினர்.

மலையாள படங்களில் குணச்சித்திர மற்றும் துணை நடிகராக நடித்து வந்த கரண் தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாமலை திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருப்பார், இதன் பின்பு நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நம்மவர் திரைப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார் கரன், இந்த படத்தில் தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தி தனக்கென ஒரு அங்கீகாரத்தை தமிழ் சினிமாவில் பெற்று கொண்டார் கரண்.

இதன் பின்பு தொடர்ந்து வில்லன் கதாபாத்திரம், மற்றும் துணை நடிகர் என கிடைக்கும் அணைத்து கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் கரண். இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான சேது படத்தில் விக்ரம் பதில் நடிகர் கரண் நடிக்க இருந்ததாகவும் ஆனால் சில காரணகளால் அந்த படத்தில் கரண் நடிக்கும் வாய்ப்பை இழந்தார் என அவரே தெரிவித்திருந்தார், இதன் பின் 2006ல் கொக்கி என்ற திரைப்படத்தின் மூலம் கதநாயகனாக அவதாரம் எடுத்தார் கரண்.

அவர் கதநாயகனாக நடித்த கருப்பசாமி குத்தைகைக்காரர் படம் வெற்றி படமாக அமைந்ததும் அவருக்கு அடுத்தடுத்து கதநாயகனாக நடிக்கும் வாய்ப்பு வர தொடங்கியது, அப்போது கரண் சம்பளம், கால் சீட் போன்ற அனைத்தையும் அவருக்கு மேனேஜராக இருந்த ஆண்டி வயதில் இருந்த பெண் ஒருவர் கவனித்து வந்துள்ளார், அபோது நடிகர் கரண் அவருடைய மேனேஜராக இருந்த அந்த ஆண்டி வயது பெண்ணுடன் லிவிங் டு கெதர் வாழ்கை வாழ்ந்து வந்ததாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது.

சிறு வயதில் குழந்தை நடச்சத்திரமாக, வில்லன் நடிகர், துணை நடிகராக நடித்து கடும் போராட்டத்துக்கு பின் கதநாயகனாக அந்தஸ்து பெற்ற நடிகர் கரண் தனது சினிமா துறை தொடர்பான அணைத்து பொறுப்பையும் அவருக்கு மானேஜராக இருந்த அந்த ஆண்டி வயது பெண்ணிடம் முழு அதிகாரத்தையும் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது, இதனை தொடர்ந்து அந்த ஆண்டி வயது பெண்ணின் அணுகுமுறை தயாரிப்பாளர்கள் தரப்பில் கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் ஒரு கட்டத்தில் கரணை வைத்து படம் தயாரிப்பதில்லை என்கிற முடிவுக்கு தயாரிப்பாளர்கள் வந்தனர், இயக்குனர்கள் இந்த கதை நடிகர் கரனுக்காக உருவாக்கியது என்று தயாரிப்பளர்களிடம் எடுத்து கூறினால் கூட ஏன் உங்களுக்கு வேறு நடிகர் கிடைக்கவில்லையா என தயாரிப்பளர்கள் பதில் சொல்லும் நிலைக்கு கரனின் சினிமா வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்தார் அவரின் ஆண்டி வயது பெண் மேனேஜர்.சினிமா துறையை சேர்ந்த சக நடிகர்கள் இந்த வயதில் உள்ள ஆண்டி இவருக்கு தேவையா என்று பேசி கொண்டனர்.

இதனை தொடர்ந்து கரண் கதநாயகனாக நடித்த அடுத்தடுத்து திரைப்படம் தோல்வியை தழுவியதை தொடர்ந்து அவரின் சினிமா வாழ்கை முடிவுக்கு வந்தது, இதன் பின் சென்னை கே கே நகரில் உள்ள அவருடைய வீட்டில் குடும்பத்துடன் வசித்து வரும்கிறார் கரண், இவர் குழந்தை நட்சத்திரமாக தொடங்கி பல படங்கள் நடித்து வந்துள்ளதால், சொத்துக்களை அப்போதே வாங்கி குவித்துள்ளார் இதனால் அவருக்கு பண பிரச்சனை இல்லை என கூறபடுகிறது.