பஸ் கண்டக்டராக தனது பயணத்தை தொடங்கிய சிவாஜி ராவ் தமிழ் திரையுலகில் ரஜினிகாந்தாக நுழைந்து சூப்பர் ஸ்டார் என்கிற உச்சத்தை தொட்டவர் நடிகர் ரஜினிகாந்த். பெயர், புகழ், பணம் என சம்பாரித்தாலும் அவர் வாழ்க்கையில் பல கட்டங்களில் நிம்மதியின்றி தவித்து வருகிறார். நிம்மதியை தேடி ஒரு கட்டத்தில் ஆன்மிகத்தை தேர்தெடுத்த ரஜினிகாந்த் அடிக்கடி இமயமலை செல்வது. அதிக தியானத்தில் ஈடுபடுவது என்பது கடந்த கால வரலாறு.
இந்நிலையில் 2012 சிக்கப்பூர் சிகிச்சைக்கு பின்பு உடல்நிலையை கருத்தில் கொண்டு ரஜினிகாந்த் தனது இமயமலை பயணத்தை நிறுத்தி கொண்டார். அடிக்கடி வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று வருகிறார். வயதான காலத்தில் ஓய்வில் இருக்க வேண்டிய நடிகர் ரஜினிகாந்த். குடும்ப உறுப்பினர்களின் ஆசைக்காக தொடர்ந்து சினிமாவில் அவர் நடித்து வருவதாக கூறப்படும் நிலையில், இதற்கு முக்கிய காரணம் இரண்டு மகள்களும் அப்பாவை வைத்து எப்படி பணம் சம்பாரிப்பது என்பதில் நடக்கும் போட்டி தான் என கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் அவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா – தனுஷ் இருவரும் பிரிவதாக அறிவித்துள்ள நிகழ்வு, ரஜினிகாந்த் அவர்களை மிக பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த விவகாரத்தில் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் என்ன சமாதானம் செய்ய முயன்றாலும் ஏற்று கொள்ளாத ரஜினிகாந்த் குடும்ப உறுப்பினர்கள் மீது உச்சகட்ட கோபத்தில் இருப்பதால் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஓய்வு நேரங்களில் அடிக்கடி சென்னையில் உள்ள இசைஞானி இளையராஜா புதிய ஸ்டூடியோ வுக்கு ரஜினிகாந்த் செல்வது வழக்கம், அங்கே சென்று நடக்கும் இசை நிகழ்வை பார்த்து ரசிப்பது, இளையராஜா உடன் மனம் விட்டு பேசுவது என அந்த ஸ்டூடியோ உள்ளே சென்றால் அவருக்கு ஒரு மன நிம்மதி கிடைப்பதாக உணரும் ரஜினிகாந்த் அடிக்கடி அங்கே சென்று வந்தார், ரஜினிகாந்த் அங்கே வருவதை இளையராஜாவும் விரும்பினார்.
இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா – தனுஷ் இருவரும் பிரிவதாக அறிவித்து சுமார் இரண்டு வாரம் ஆன நிலையில், நிம்மதியின்றி தவித்து வந்த ரஜினிகாந்த், வீட்டை விட்டு வெளியே வந்து டிரைவர் வண்டியை எடு என சொன்னவர், இளையராஜா ஸ்டுடியோவுக்கு சென்று அவருடன் தனது கவலைகளை பகிர்ந்து கொண்டு வழக்கம் போல் அங்கே நடக்கும் நிகழ்வுகளை பார்த்து வீடு திரும்பியுள்ளாராம்.ஓய்வு நேரங்களில் அடிக்கடி இங்கே வாங்க என இளையராஜாவும் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து இளையராஜா ஸ்டுடியோவில் இருக்கும் வரை கவலைகளை மறந்து காட்சியளிக்கும் ரஜினிகாந்த், மீண்டும் தனது வீட்டுக்கு திரும்பிய பின்பு குடும்ப உறுப்பினர் மீது உள்ள கோபத்தில் யாருடன் பேசாமல் அமைதியாக இருந்து வருவதாக கூறப்படும் நிலையில், ரஜினிகாந்தை எப்படி சமாதனம் செய்வது என தவியா தவித்து வருகின்றனர் அவரது குடும்ப உறுப்பினர்கள் என கூறப்படுகிறது.