நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஆரம்பத்தில் தனுஷின் அண்ணன் செல்வராக அவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். அதன் பிறகு டைரக்ஷன் மீது ஆர்வம் கொண்ட ஐஸ்வர்யா, தனது கணவர் தனுஷை வைத்தே முதல் படத்தை இயக்கினார். தனுஷ், சுருதிஹாசன், சிவகார்த்திகேயன் உள்ளிட்டவரை வைத்து ஐஸ்வர்யா இயக்கிய படம் தான் 3 படத்தில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
இந்த படத்தை எடுத்து முடிப்பதற்கு முன்னதாக, தனுஷும் அனிருத்தும் இணைந்து “ஒய் திஸ் கொலவெறி டி” ஆல்பத்தை உருவாக்கி இருந்தார்கள். மேலும், இந்தப் பாடலை youtube-ல் வெளியிட்டார்கள். அவர்கள் எதிர்பார்க்கிறாத அளவிற்கு உலகம் முழுவதும் பாடல் ஹிட் அடித்தது. இதனால், இந்த பாடலை 3 படத்திலும் வைத்தார்கள். ஆனால், கொலவெறி பாடலுக்கு கிடைத்த வரவேற்பு 3 படத்திற்கு கிடைக்கவில்லை. இது படக்குழுவினருக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது.
அதே நேரத்தில் 3 படத்தில் இடம்பெற்ற அணைத்து பாடல்களும் செம்ம ஹிட் அடித்தது, இதில் வொய் திஸ் கொலவெறி பாடல் உலகம் முழுவதும், அணைத்து தரப்பு மக்களிடமும் நல்ல ரீச் ஆனது, குறிப்பாக படம் படு மொக்கையாக இருந்தாலும் கூட இப்படி ஒரு படம் வந்திருக்கிறது என்பது கூட அந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மூலம் தான் தெரிய வந்தது, அந்த வகையில் தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இன்று மிக பெரிய உச்சத்தில் இருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத்.
ஆனால் இயக்குனராக கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்டு முதல் படத்திலே மன்னனை கவ்வி இருந்தார் ஐஸ்வர்யா. இப்படத்தை அடுத்து ஐஸ்வர்யா வை ராஜா வை என்ற படத்தை இயக்கி வெளியிட்டு இருந்தார். அந்தப் படமும் ரசிகர்கள் மத்தியில் ஈடுபடவில்லை. அதன் பிறகு 9 வருடங்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்த ஐஸ்வர்யா, லால் சலாம் படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆகியுள்ளார். அதுவும் படு தோல்வியை அடைந்துள்ளது.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கொலவெறி பாடலின் டிஜிட்டல் வெளியீட்டுக்கு கிடைத்த அமோக வரவேற்பை கண்டு ஆச்சரியப்படுவதற்கு பதிலாக அதிர்ச்சி அடைந்ததாகவும், அந்தப் பாடல் படத்தை விழுங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசுகையில், கொலவெறி பாடலுக்கு இந்த அளவிற்கு ரீச் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும், அந்தப் பாடலை படத்திற்கு மிகுந்த அழுத்தத்தை உண்டாக்கியதாக தெரிவதை ஐஸ்வர்யா.
நான் ஒரு வித்தியாசமான கதையைச் சொல்ல முயற்சித்தேன்… ஆனால் பின்னர் பாடல் வெளியாகிவிட்டது, அது படத்தை விழுங்கி மறைத்தது. எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. நாங்கள் ஒரு சீரியஸான, திருப்தியான படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தோம். 3 படம் வெளியான பிறகும், அந்தப் படத்தைப் பற்றி என்னிடம் அதிகம் பேசவில்லை இருப்பினும், திரைப்படம் மீண்டும் வெளியிடப்படும்போதோ அல்லது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்போதோ, அதைப் பாராட்டி எனக்கு நிறைய தொலைபேசி அழைப்புகள் வருகின்றன,” என்று பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
மேலும் பாடல் படத்திற்கு ஏதேனும் உதவியாக இருந்ததா என்று நீங்கள் என்னிடம் கேட்டால், நான் முற்றிலும் இல்லை என்று சொல்வேன். இது நிறைய பேருக்கு அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் உதவியிருந்தால், அது ஒரு நல்ல விஷயம்,” என்று ஐஸ்வர்யா கூறியிருப்பது, கொலவெறி பாடல் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான தனுஷ் பாலிவுட் சினிமா, ஹாலிவுட் என வாய்ப்பு பெற்று நுழைந்தார், அதே போன்று அனிருத் கொலவெறி பாடல் மூலம் மிக பெரிய இசையமைப்பாளர் ஆனார் என்று மறைமுகமாக தெரிவித்துள்ளது.
தனுஷ் – அனிருத் இருவருக்கு திறமை இருக்கிறது அதனால் மிக பெரிய வெற்றியை அடைந்தார்கள், ஆனால் ஐஸ்வர்யாவுக்கு எந்த ஒரு திறமையும் இல்லாமல் அப்பா பெயரை பயன்படுத்தி ஒரு குப்பை படத்தை எடுத்துவிட்டு, அந்த படத்தில் இடம் பெற்ற கொலவெறி பாடல் தான் என்னுடைய படத்தை விழுங்கி விட்டது என தன்னை பேசுவதெல்லாம் சரியா என உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.